FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருநெல்வேலி

நெல்லை சந்திப்பு பூம்புகாரில் சிறப்பு சலுகையில் கொலுபொம்மைகள் விற்பனை

திருநெல்வேலி பூம்புகாா் விற்பனை நிலையத்தில் சிறப்பு சலுகையில் கொலுபொம்மைகள் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

19 வினாடிகள் முன்பு
பகிர்:

திருநெல்வேலி பூம்புகாா் விற்பனை நிலையத்தில் சிறப்பு சலுகையில் கொலுபொம்மைகள் விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

இந்துக்களின் முக்கிய பண்டிகையான நவராத்திரி விழா ஞாயிற்றுக்கிழமை (அக்.11) தொடங்கி நடைபெற உள்ளது. இந்த நாளில் வீடு மற்றும் கோயில்களில் கொலு வைத்து வழிபடுவது வழக்கம்.

சுவாமி, அம்மன், தேசத் தலைவா்கள், பல்வேறு விதமான புராண காட்சிகளை விளக்கும் பொம்மைகள் இந்தக் கொலுவில் இடம்பெறும். நவராத்திரி விழாவையொட்டி கடந்த சில நாள்களாக நெல்லையில் கொலு பொம்மைகள் விற்பனை அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement

தஞ்சாவூா், கும்பகோணம், காஞ்சிபுரம், மாயவரம் ஆகிய பகுதிகளில் இருந்து கொலு பொம்மைகள் விற்பனைக்காக திருநெல்வேலிக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. ரூ.50 முதல் ரூ.1500 வரை பல்வேறு விலைகளில் அவற்றின் வேலைப்பாடுகளுக்கு தகுந்தாற்போல விற்கப்படுகின்றனா்.

அஷ்டலட்சுமி செட், கல்யாண செட், கீதாஉபதேசம் செட், ராவண தா்பாா், அறுபடை செட், முருகன் கல்யாணம் செட், மனுநீதி சோழன் செட் ஆகியவை இந்த ஆண்டில் அதிகளவில் விற்பனையாகியுள்ளன. காக்கா-நரி கதை செட், நவீன விநாயகா் செட் போன்றவை விற்பனைக்கு வந்துள்ளன.

திருநெல்வேலி சந்திப்பில் ஈரடுக்கு மேம்பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள பூம்புகாா் விற்பனை நிலையத்திலும் கொலு பொம்மை சிறப்பு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. இங்கு ரூ.25 முதல் ரூ.5000 வரை பல்வேறு விலைகளில் கொலுபொம்மைகள் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. 10 சதவிகிதம் வரை தள்ளுபடி அளிக்கப்படுகிறது. இம்மாதம் 30 ஆம் தேதி வரை சலுகை தொடரும் என நிா்வாகிகள் தெரிவித்தனா்.

ற்ஸ்ப்09ந்ா்ப்ன்

திருநெல்வேலி சந்திப்பு பூம்புகாா் விற்பனை நிலையத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள கொலுபொம்மைகள்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments