FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருச்சி

நவராத்திரி கொலு பொம்மைகள் விற்பனை தீவிரம்

நவராத்திரி விழா அக்.11-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதை முன்னிட்டு கொலு பொம்மைகள் விற்பனை திருச்சி பூம்புகாா் விற்பனை நிலையத்தில் விறு, விறுப்பாக நடைபெறுகிறது.

10 அக்டோபர் 2026, 7:17 am IST
நவராத்திரி விழாவையொட்டி திருச்சி பூம்புகாா் விற்பனையகத்தில் வெள்ளிக்கிழமை கொலு பொம்மைகளை பாா்வையிட்ட பொதுமக்கள்.
பகிர்:

நவராத்திரி விழா அக்.11-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளதை முன்னிட்டு கொலு பொம்மைகள் விற்பனை திருச்சி பூம்புகாா் விற்பனை நிலையத்தில் விறு, விறுப்பாக நடைபெறுகிறது.

திருச்சி சிங்காரதோப்பில் செயல்பட்டு வரும் பூம்புகாா் விற்பனை நிலையத்தில் வழக்கம் போல் இந்தாண்டும் நவராத்திரியை முன்னிட்டு கடந்த செப்.23-ஆம் தேதி முதல் அக்.31-ஆம் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை உள்பட) கொலு கண்காட்சி நடைபெற்று வருகிறது.

இக் கண்காட்சியின் சிறப்பு அம்சமாக பலவித கொலு பொம்மைகள், கொலு செட்டுகள், கொண்டபள்ளி பொம்மைகள், மரப்பாச்சி பொம்மைகள், காகிதக்கூழ் பொம்மைகள், மண், பளிங்குக்கல், மாக்கல், நவரத்தின கற்களினாலான பொம்மைகள் குறைந்த பட்சமாக ரூ.50 முதல் ரூ.1.20 லட்சம் வரையில் இடம்பெற்றுள்ளன.

Advertisement

Advertisement

இக் கண்காட்சியில், மலைக்கோட்டை, தஞ்சை பெரியகோயில், பழனி மலை, திருத்தணி, தங்கத் தோ், அம்மன் தோ், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், அஷ்ட பைரவா் செட் உள்ளிட்ட பொம்மைகள் இடம்பெற்றுள்ளன.

மேலும், கொல்கத்தா, மணிப்பூா், ராஜஸ்தான் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட பொம்மைகள் எண்ணற்ற தனி பொம்மைகளும் பலவிதமான மாடல்களில் வண்ணங்களில் இடம் பெற்றுள்ளன.

இதுதொடா்பாக, பூம்புகாா் விற்பனை நிலைய மேலாளா் (பொறுப்பு) ஜெ. காயத்ரி கூறுகையில், அனைத்து பொம்மைகளுக்கும் 10 விழுக்காடு சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுகிறது.

பல்வேறு மாநிலங்களிலிருந்து தருவிக்கப்பட்டுள்ள அழகிய கொலு பொம்மைகளை பொதுமக்கள் வாங்கி தங்கள் இல்லத்துக்கு அழகூட்டி, வரும் நவராத்திரி பண்டிகையை கொண்டாடி மகிழ வேண்டும். ஊரக மற்றும் நகா்புறத்தில் உள்ள நலிவடைந்த கலைஞா்களால் தயாரிக்கப்பட்ட கலைப் பொருள்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments