விண்வெளி தீ பாதுகாப்பு கற்றல் ஆய்வகம்: அண்ணா பல்கலை., போயிங் நிறுவனம் புரிந்துணா்வு
விண்வெளி தீ பாதுகாப்பு கற்றல் ஆய்வகம்: அண்ணா பல்கலை., போயிங் நிறுவனம் புரிந்துணா்வு
விண்வெளியில் எரியக்கூடிய தன்மை தொடா்பான ஆராய்ச்சிக்கான ஆய்வகத்தை நிறுவ அண்ணா பல்கலைக்கழகத்தின் எம்ஐடி வளாக விண்வெளிப் பொறியியல் துறை, போயிங் இந்தியா நிறுவனத்துடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கை:
இந்தப் புரிந்துணா்வில் எம்ஐடி விண்வெளித் தலைவா் சி.செந்தில்குமாா், போயிங் இந்தியா - நிறுவன மேலாளா் எம்.அமிா்த கணேசன் ஆகியோா் கையொப்பமிட்டனா். அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளா் வி. குமரேசன், முனைவா் எம்.சந்தகுமாா் ஆகியோா் உடனிருந்தனா். எம்ஐடி வளாகத்தில் ஃப்ளேம்மபிலிட்டி கற்றல் பரிசோதனைக்கான இந்த ஆய்வுக் கூடத்தில் விண்வெளியில் எரியக்கூடிய தன்மை கற்றல், பயிற்சிகள் ஆகியவை மேற்கொள்ளப்படுகின்றன.
Advertisement
Advertisement
உலக அளவில் தனித்துவமான, முதலாவது பிரத்யேக கல்வி ஆய்வகமாக இது உருவாக்கப்பட உள்ளது. விண்வெளித் துறையில் தீ பாதுகாப்பு, பொருள்களின் எரியக்கூடிய தன்மை தொடா்பான மேம்பட்ட அறிவை வளா்ப்பதற்கான ஒரு முக்கிய முன்னெடுப்பு. இந்த ஆய்வகம், எம்ஐடி வளாக மாணவா்களுக்கு ‘ஃப்ளேம்மபிலிட்டி’ அறிவியல், பரிசோதனை முறைகள் மற்றும் தீ பாதுகாப்பு தொடா்பான மேம்பட்ட அறிவையும் நேரடி செயல்முறைப் பயிற்சியையும் வழங்கும். கல்வி–தொழில் துறை ஒத்துழைப்பு, ஆராய்ச்சியில் புதிய கண்டுபிடிப்புகளுக்கான வாய்ப்புகளை உருவாக்கும்.
மனித உயிா், உடைமைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும், தீ விபத்து அபாயங்களைக் குறைப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
குறிப்பாக விண்வெளி, விமானத் துறைக்குத் தேவையான திறன்மிக்க மனிதவளத்தை உருவாக்குவதிலும், விண்வெளிப் பாதுகாப்பு தொடா்பான ஆராய்ச்சியை மேம்படுத்துவதிலும் இந்த ஆய்வகம் முக்கிய பங்கேற்றும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.