FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

மீனவர்கள் கோஷ்டி மோதல்: 16 பேர் மீது வழக்குப் பதிவு

மாமல்லபுரம் அருகே மீனவர்களுக்குள் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து 16 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

9 ஜனவரி 2024, 12:19 pm
பகிர்:

மாமல்லபுரம் அருகே மீனவர்களுக்குள் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து 16 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

மாமல்லபுரம் அருகே பட்டிபுலம் மீனவர் குப்பத்தைச் சேர்ந்த ஊராட்சித் துணைத் தலைவர் சேகர். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த சரவணனும் மீனவர்கள். இந்த இருவர் கோஷ்டிக்கும் இடையே முறை வைத்து மீன் பிடிப்பதில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்த நிலையில் வியாழக்கிழமை இரவு இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் சரவணன் மனைவி தீபா, அவரது உறவினர் கலையரசி ஆகியோர் பலத்த காயமடைந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இது தொடர்பாக மாமல்லபுரம் காவல் நிலையத்தில் இருதரப்பினரும் புகார் மனு அளித்தனர். இதுதொடர்பாக காவல் ஆய்வாளர் கோவிந்தசாமி விசாரணை நடத்தினார். இதில் சேகர் தரப்பில் அவர் உள்பட 10 பேர் மீதும், சரவணன் தரப்பில் அவர் உள்பட 6 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனால் அந்த பகுதி மீனவர்கள் சனிக்கிழமை மீன் பிடிக்க கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments