கனமழை: விழுப்புரம், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு இன்று (அக். 23) விடுமுறை
விழுப்புரம், கள்ளக்குறிச்சி, புதுச்சேரி, காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது குறித்து...
விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வட கிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் புதன்கிழமை இரவு மற்றும் வியாழக்கிழமை பலத்த மழை பெய்தது. சென்னையில் வியாழக்கிழமை இரவு தொடங்கிய மழை, வெள்ளிக்கிழமை காலை வரையில் பெய்து வருகிறது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியுள்ளது.
இந்த நிலையில், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால், இந்த 3 மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (அக். 23) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
Advertisement
Advertisement
இதேபோல், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படுவதாக அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டுள்ளார்.
Heavy rain: Holiday for schools in Villupuram, Kallakurichi, Puducherry and Karaikal districts today (Oct. 23)
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.