தொடர் வழிப்பறி: 4 பேர் கைது
ஒரகடம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்ட வந்த நான்கு பேரை ஒரகடம் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஒரகடம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்ட வந்த நான்கு பேரை ஒரகடம் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஒரகடம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாலையில் நடந்து செல்பவர்களையும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்களையும் தாக்கி செல்லிடப்பேசி மற்றும் பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. அவ்வாறு வழிப்பறியில் ஈடுபடுபவர்களைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், ஒரகடத்தை அடுத்த பனப்பாக்கம் பகுதியில், வண்டலூர்-வாலாஜாபாத் சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த நான்கு இளைஞர்களை தனிப்படை போலீஸார் பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் வண்டலூர் புது ஓட்டேரி பகுதியைச் சேர்ந்த மணிவண்ணன்(26), மணிகண்டன்(29), வண்டலூரை அடுத்த கொளப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த நவீன்(22), புதுப்பெருங்களத்தூர் சதானந்தபுரம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார்(23) என்பதும், அவர்கள் சாலையில் தனியாக நடந்து செல்பவர்களைத் தாக்கி செல்லிடப்பேசி மற்றும் பணம் பறித்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து அவர்களைக் கைது செய்த போலீஸார் அவர்களிடம் இருந்து 2 செல்லிடப்பேசிகள், இரண்டு கத்திகள், நான்கு இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.