FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தேசிய கைத்தறி தினம்: நெசவாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

தேசிய கைத்தறி தினத்தையொட்டி நெசவாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் பா.பொன்னையா வழங்கினார். 

30 ஜனவரி 2024, 9:57 pm IST
பகிர்:


தேசிய கைத்தறி தினத்தையொட்டி நெசவாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் பா.பொன்னையா வழங்கினார். 
தேசிய கைத்தறி தினம் நாடு முழுவதும் கடந்த 7ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இதையொட்டி, காஞ்சிபுரம் சரகம் நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள், இதர மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் புதிய வடிவமைப்பு ரகங்களின் விற்பனையை அதிகரிக்கும் வகையில் கைத்தறித் துணிநூல் துறை சார்பில் சிறப்பு கைத்தறிக் கண்காட்சி கடந்த 1 ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை அண்ணா பட்டு வளாகத்தில் நடைபெற்றது. இந்தக் கண்காட்சியில், காஞ்சிபுரம், ஆரணி, கோவை, பரமக்குடி, ஈரோடு, சென்னிமலை, பவானி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பட்டு, பருத்தி சேலைகள், படுக்கை விரிப்புகள், துண்டுகள், தலையணை, ஜமுக்காளம் உள்ளிட்ட ஜவுளி ரகங்கள் விற்பனை செய்யப்பட்டன. 
இதன் நிறைவு விழாவின்போது நெசவாளர்களுக்கு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இவ்விழா, தேசிய கைத்தறி நாளான ஆகஸ்ட் 7ஆம் தேதி, காஞ்சிபுரம் காமராசர் தெருவில் உள்ள தனியார் மண்டபத்தில் ஆட்சியர் பா.பொன்னையா தலைமையில் நடைபெற்றது. இதில், சுமார் 500 நெசவாளர்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். தொடர்ந்து, பிரதமரின் முத்ரா கடன் திட்டத்தின்கீழ் யூனியன் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவை சார்பில் 75 பயனாளிகளுக்கு ரூ.10 ஆயிரம் மானியத்துடன் ரூ.50 ஆயிரம் கடன் வழங்கப்பட்டது. நெசவாளர் நல்வாழ்வுத் திட்டம் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சம் வீதம் காப்பீட்டுத்தொகை அனுமதி வழங்கப்பட்டது. அதோடு, சேமிப்பு பாதுகாப்புத் திட்டம் சார்பில் 15 பேருக்கு திட்டத்தொகை வழங்கப்பட்டது. 
இவ்விழாவில், துணிநூல் துறை இணை இயக்குநர் செல்வம், முருகன் பட்டு கூட்டுறவு சங்க இணை இயக்குநர் சாரதி சுப்புராஜ், நெசவாளர் சேவா மைய துணை இயக்குநர் கார்த்திகேயன், தேசிய வங்கிகளின் மேலாளர்கள், சங்க உறுப்பினர்கள், நெசவாளர்கள், பொதுமக்கள் என திரளானோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments