FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

பொன். மாணிக்கவேல் மீதான குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட வேண்டும்: அமைச்சர் சி.வி.சண்முகம்

காவல் துறை அதிகாரி பொன்.மாணிக்கவேல் மீதான குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட வேண்டும் என சட்டம், நீதிமன்றங்கள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.

30 ஜனவரி 2024, 11:25 pm IST
பகிர்:


காவல் துறை அதிகாரி பொன்.மாணிக்கவேல் மீதான குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட வேண்டும் என சட்டம், நீதிமன்றங்கள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.
காஞ்சிபுரத்தில் கூடுதல் சார்பு நீதிமன்றத் திறப்பு விழாவுக்கு புதன்கிழமை வருகை தந்த அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்களிடம் கூறியது: சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜி பொன்.மாணிக்கவேல் மீது அவரது கீழ் பணியாற்றும் காவல் துறையினர் குற்றச்சாட்டு வைத்துள்ளனர். இது மிகப்பெரிய குற்றச்சாட்டாக உள்ளதால், புகார் குறித்து விசாரிக்க வேண்டும். பொன்.மாணிக்கவேல் அதிகாரி என்பதற்காக அவர் மீது விசாரணை நடத்தாமல் இருக்க முடியாது. பொன்.மாணிக்கவேல் விவகாரத்தில் தன் நிலைப்பாட்டை விசாரணையின்போது அரசு எடுத்துரைக்கும். 
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 7 பேர் விடுதலை விவகாரத்தில், தமிழக அரசு ஆளுநரிடம் ஏற்கெனவே பரிந்துரை செய்து விட்டது. அதன்படி, ஒரு அரசு செய்ய வேண்டிய கடமையை செய்துவிட்டது. ஆளுநரின் முடிவையே அரசு எதிர்பார்த்துள்ளது. காவிரி மேலாண்மை, மேக்கேதாட்டு விவகாரத்தில் பேச்சுவார்த்தை என்பதற்கே இடமில்லை. இதை தமிழக அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது என்றார்.
முன்னாள் எம்எல்ஏக்கள் வாலாஜாபாத் பா.கணேசன், வி.சோமசுந்தரம், பன்னீர் செல்வம், மைதிலி திருநாவுக்கரசு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments