FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காஞ்சிபுரம்

ஆதிதிராவிடர் - பழங்குடியினர் விடுதியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்'

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல விடுதிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

Updated On : 8 ஜூன் 2018, 2:53 am IST
பகிர்:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல விடுதிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஆதிதிராவிடர் பழங்குயிடியினர் நலத் துறை சார்பில் செயல்படும் விடுதிகளில் ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. 
இதில், உணவு, இருப்பிடம் இலவசமாக வழங்கப்படுகிறது. நடப்பு கல்வியாண்டில் புதிதாக மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இவ்விடுதியில் சேர விரும்பும் ஆதிதிராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், இதர வகுப்பினைச் சேர்ந்த மாணவர்களுடைய பெற்றோரின் ஆண்டு வருமானம் 2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். விடுதிக்கும், பெற்றோர் வசிக்கும் இடத்துக்கும் குறைந்தபட்சம் 5 கி.மீ. தொலைவு இருக்க வேண்டும். மாணவிகளுக்கு இது பொருந்தாது. 
மேலும், இந்த விடுதிகளில் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களின் குழந்தைகள் தங்கி கல்வி பயில ஏதுவாக ஒவ்வொரு விடுதியிலும் கூடுதலாக 5 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலகம் அல்லது சம்பந்தப்பட்ட விடுதி காப்பாளரிடம் நேரில் அணுகி விண்ணப்பம் பெறலாம். 
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பமானது, வரும் ஜூன் 15-ஆம் தேதிக்குள் உரிய விடுதி காப்பாளரிடம் வழங்கிட வேண்டும். அதுபோல், கல்லூரி விடுதியில் சேர விரும்பும் மாணவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 25-ஆம் தேதிக்குள் கல்லூரி காப்பாளரிடம் ஒப்படைக்கவேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments