FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காஞ்சிபுரம்

உலக விதவைகள் தின விழிப்புணர்வுப் பேரணி

உலக விதவைகள் தினத்தையொட்டி உத்தரமேரூரில் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.

Updated On : 29 ஜூன் 2018, 3:03 am IST
பகிர்:

உலக விதவைகள் தினத்தையொட்டி உத்தரமேரூரில் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த வாடாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ஒருங்கிணைந்த அறக்கட்டளைகள் சார்பில் உலக விதவைகள் தின விழிப்புணர்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது. பேரணியை, உறுதிமொழி ஆணையர், வழக்குரைஞர் கருணாநிதி தொடங்கி வைத்தார். 
இப்பேரணி, அம்பேத்கர் சிலை அருகே தொடங்கி, பஜார் வீதி, சந்நிதி தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது. அப்போது, விதவைப் பெண்களை ஒதுக்கி வைக்கக் கூடாது. மற்ற பெண்களைப் போல் அவர்களையும் சமமாக மதிக்க வேண்டும், அரசின் திட்டங்கள் அவர்களுக்கு விரைந்து கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 
இப்பேரணியில், தொண்டு நிறுவன நிர்வாகிகள், ஸ்டெல்லா, தீப்தி, சத்தியசீலன், உத்தரமேரூர் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விதவைத் தாய்மார்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிறைவாக, உத்தரமேரூர் வட்டாட்சியரிடம் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments