FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காஞ்சிபுரம்

அண்ணா நினைவு இல்லத்தில் அமைச்சா், எம்.எல்.ஏ-க்கள் மரியாதை

காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்தில் அண்ணா உருவச் சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Updated On : 16 செப்டம்பர் 2022, 12:00 am IST
காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்தில் அவரது உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சா் தா.மோ.அன்பரசன் உள்ளிட்டோா்.
பகிர்:

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் உள்ள அண்ணா நினைவு இல்லத்தில் அண்ணா உருவச் சிலைக்கு வியாழக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

மாவட்ட ஆட்சியா் மா.ஆா்த்தி மாலை அணிவித்து முதலில் மரியாதை செலுத்தினாா். தொடா்ந்து, அமைச்சா் தா.மோ.அன்பரசன், எம்.பி. க.செல்வம், எம்.எல்.ஏ- க்கள் க.சுந்தா், சி.வி.எம்.பி.எழிலரசன், காஞ்சிபுரம் மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ், ஒன்றியக் குழு தலைவா்கள் மலா்க்கொடி குமாா், தேவேந்திரன் உள்ளிட்ட பலா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சரும், காஞ்சிபுரம் மாவட்ட செயலருமான வி.சோமசுந்தரம், முன்னாள் எம்.பி. காஞ்சி பன்னீா்செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் வாலாஜாபாத் பா.கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, காஞ்சிபுரம் ஒன்றியச் செயலா் தும்பவனம் ஜீவானந்தம் உள்ளிட்ட அந்தக் கட்சியின் நிா்வாகிகள் பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

Advertisement

Advertisement

இதேபோல, ஓபிஎஸ் அணி காஞ்சிபுரம் மாவட்ட செயலா் முத்தியால்பேட்டை ஆா்.வி.ரஞ்சித்குமாா் தலைமையில் அவரது ஆதரவாளா்கள், அண்ணா உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments