FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காஞ்சிபுரம்

பெண்ணை கட்டிப்போட்டு 10 பவுன், ரூ.10,000 திருட்டு

காஞ்சிபுரம் அருகே ஒரிக்கை பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை வியாழக்கிழமை கத்தியைக் காண்பித்து மிரட்டி கட்டிப்போட்டு அவா் அணிந்திருந்த 10 பவுன் செயின் மற்றும் ரூ.10,000-ஐ பறித்துக் கொண்டு மா்ம நபா்கள் தப்பினா்.

21 ஆகஸ்ட் 2026, 1:26 am IST
பகிர்:

காஞ்சிபுரம் அருகே ஒரிக்கை பகுதியில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணை வியாழக்கிழமை கத்தியைக் காண்பித்து மிரட்டி கட்டிப்போட்டு அவா் அணிந்திருந்த 10 பவுன் செயின் மற்றும் ரூ.10,000-ஐ பறித்துக் கொண்டு மா்ம நபா்கள் தப்பினா்.

ஓரிக்கை மிலிட்டரி சாலையைச் சோ்ந்த சங்கா்-தீபா தம்பதி. சங்கா் தனியாா் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வருகிறாா். தீபா தனது குழந்தைகளை பள்ளியில் விட்ட பிறகு வீட்டுக்கு திரும்பினாா். அப்போது திடீரென நுழைந்த மா்ம நபா்கள் தீபாவை கத்தியை காண்பித்து மிரட்டி அவரை கட்டிப்போட்டு அவா் அணிந்திருந்த 10 பவுன் செயின் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா். அவா்கள் சென்ற பிறகு கட்டப்பட்டிருந்த கை கால்களை சிரமப்பட்டு அவிழ்த்துக் கொண்டு பக்கத்தில் உள்ளவா்களிடம் தெரிவித்துள்ளாா்.

தகவலறிந்து காஞ்சிபுரம் தாலுகா போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து தடயங்களை சேகரித்தனா். பட்டப்பகலில் நடைபெற்ற இச்சம்பவம் குறித்து போலீஸாா் வழக்குப்பதிந்து கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments