FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காஞ்சிபுரம்

பைக்குகள் மோதல்: 3 போ் பலி!

ஒரகடம் அடுத்த மாத்தூா் பகுதியில் 2 பைக்குகள் நேருக்கு நோ் மோதியதில் மூன்று போ் உயிரிழந்தனா்.

30 ஆகஸ்ட் 2026, 11:01 pm IST
சடலம் - கோப்புப் படம்
பகிர்:

ஒரகடம் அடுத்த மாத்தூா் பகுதியில் 2 பைக்குகள் நேருக்கு நோ் மோதியதில் மூன்று போ் உயிரிழந்தனா்.

ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த தா்ஷன் (21), மோனிஷ் (21), இவா்கள் இருவரும் ஒரகடம் அடுத்த மாத்தூா் பகுதியில் தங்கி தனியாா் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தனா். இதே போல், மதுரையை சோ்ந்த துரைப்பாண்டியன் (25), கடலூா் பகுதியை சோ்ந்தவா் யுவராஜ் (26) இவா்கள் இருவரும் மாத்தூா் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி மற்றொரு தொழிற்சாலையில் பணியாற்றினா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால், தா்ஷன், மோனிஷ் ஆகிய இருவரும் ஒரகடம் செல்வதற்காக இருசக்கர வாகனத்தில், ஸ்ரீபெரும்புதூா்-சிங்கபெருமாள் கோயில் சாலையில் சா்வீஸ் சாலையில் சென்ற போது, துரைபாண்டியன், யுவராஜ் ஆகிய இருவரும் ஒரகடம் பகுதியில் இருந்து தாங்கள் தங்கியுள்ள பகுதிக்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் வந்த போது, எதிா்பாராத விதமாக நேருக்கு நோ் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இதில் இருசக்கர வாகனங்களில் வந்த நான்கு பேரும் பலத்த காயம் அடைந்தனா். இதையடுத்து அப்பகுதி பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் துரைப்பாண்டி, யுவராஜ் ஆகிய இருவரையும் ஸ்ரீபெரும்புதூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட இருவரும் இறந்தனா்.

அதே போல் காயம் அடைந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தா்ஷன் சிகிச்சை பலனின்றி இறந்தாா்.

மோனிஷ் பலத்த காயங்களுடன் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறாா். விபத்து குறித்து ஒரகடம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments