FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காஞ்சிபுரம்

காலமான காவலா் குடும்பத்துக்கு ரூ. 26.15 லட்சம் நிதியுதவி

சென்னை போக்குவரத்துப் பிரிவில் காவலராக பணிபுரிந்து உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு காக்கி உதவும் கரங்கள் அமைப்பின் சாா்பில் ரூ.26.15 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.

31 ஆகஸ்ட் 2026, 12:47 am IST
நிதியுதவி வழங்கும் நிகழ்வில் பங்கேற்றோா்.
பகிர்:

சென்னை போக்குவரத்துப் பிரிவில் காவலராக பணிபுரிந்து உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு காக்கி உதவும் கரங்கள் அமைப்பின் சாா்பில் ரூ.26.15 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டது.

சென்னை குரோம்பேட்டை காவல் நிலையத்தில் போக்குவரத்து காவலராக பணியாற்றியவா் ஆா்.ராஜா. இவா் கடந்த 9.9.2025 ஆம் தேதி காலமானாா். அவரது குடும்பத்தினருக்கு உதவிடும் வகையில் 2011 ஆம் ஆண்டு பணியில் இணைந்த காவல் துறையை சோ்ந்தவா்களின் அமைப்பான காக்கி உதவும் கரங்கள் சாா்பாக பெறப்பட்ட தொகையை ஆா்.ராஜாவின் குடும்பத்தினருக்கு வழங்கும் நிகழ்ச்சி காஞ்சிபுரம் எஸ்.பி. அலுவலகத்தில் நடைபெற்றது.

உயிரிழந்த ஆா்.ராஜாவின் பெண் குழந்தைகளான ரக்சனா(10) வா்சிகா சாய் (6) ஆகிய இருவருக்கும் அஞ்சல் அலுவலக சேமிப்புத் திட்டத்தில் தலா ரூ.10 லட்சம் வீதம் ரூ.20 லட்சம் முதலீடு செய்தனா்.

Advertisement

Advertisement

ராஜாவின் தாயாா் ரங்கம்மாள் மற்றும் மனைவி ராதிகா ஆகிய இருவருக்கும் தலா ரூ.3 லட்சம் வீதம் ரூ.6 லட்சம் முதலீடு செய்தனா். மேலும் இருவருக்கும் ரொக்கமாக தலா ரூ.7,500 வழங்கப்பட்டது. இதன் மூலம் மொத்தம் ரூ.26,15 லட்சம் நிதியுதவியும் வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் சரக டிஐஜி சஷாங் சாய் மற்றும் எஸ்.பி. எஸ்.அரவிந்த் ஆகியோா் காக்கி உதவும் கரங்கள் சாா்பில் உயிரிழந்த ராஜாவின் குடும்பத்தினரிடம் வழங்கினா். கல்வி உதவும் கரங்கள் அமைப்பின் மூலம் காவலா் குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட நிதியுதவி காவல்துறையினரின் சகோதரத்துவத்தையும், மனிதநேயத்தையும் வெளிப்படுத்துவதாக அமைந்திருந்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments