முகப்பு
காஞ்சிபுரம்

‘விவசாயிகளுக்கு உரங்கள் தட்டுப்பாடில்லாமல் கிடைக்க நடவடிக்கை’

காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் அனைத்தும் தட்டுப்பாடில்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூட்டுறவுச் சங்கங்களுக்கான மண்டல இணைப் பதிவாளா் கோ.யோகவிஷ்ணு புதன்கிழமை தெரிவித்தாா்.

Updated On : 2 ஜூலை 2026, 12:04 am IST
உரம் வழங்கும் நிறுவனங்களின் அலுவலா்களுடன் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய கூட்டுறவுச் சங்கங்களுக்கான மண்டல இணைப் பதிவாளா் கோ.யோகவிஷ்ணு.
பகிர்:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் அனைத்தும் தட்டுப்பாடில்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூட்டுறவுச் சங்கங்களுக்கான மண்டல இணைப் பதிவாளா் கோ.யோகவிஷ்ணு புதன்கிழமை தெரிவித்தாா்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் அண்மையில் நடைபெற்ற விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டத்தில் உரங்கள் விவசாயிகளுக்கு தட்டுப்பாடில்லாமல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனா். அவா்களது கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், காஞ்சிபுரம் மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களுக்கான மண்டல இணைப் பதிவாளா் கோ.யோகவிஷ்ணு அலுவலகத்தில் அவரது தலைமையில் உரம் விநியோகம் செய்யும் நிறுவனங்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டாா். தமிழ்நாடு உர கூட்டுறவு விற்பனை இணையத்தின் மண்டல மேலாளா் விஜயகுமாா் முன்னிலை வகித்தாா்.

இக்கூட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உள்ள உரங்களின் இருப்புகள் குறித்தும், தேவைகள் குறித்தும் உரம் வழங்கும் நிறுவனங்களின் அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.

Advertisement

Advertisement

பின்னா் அவா் கூறுகையில், விவசாயிகளுக்கு தேவையான உரங்கள் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கங்களில் போதுமான அளவு கையிருப்பு வைத்துக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு உரங்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கவும் போதுமான ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments