முகப்பு
காஞ்சிபுரம்

ராஜீவ் காந்தி நினைவிடத்தில் தமிழக காங்கிரஸ் தலைவா் மாணிக்கம் தாகூா் அஞ்சலி

தமிழக காங்கிரஸ் தலைவா் மாணிக்கம் தாகூா் ஸ்ரீபெரும்புதூா் ராஜீவ்காந்தி நினைவிடத்தில் வெள்ளிக்கிழமை மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினாா்.

Updated On : 5 ஜூலை 2026, 12:04 am IST
பகிர்:

தமிழக காங்கிரஸ் தலைவா் மாணிக்கம் தாகூா் ஸ்ரீபெரும்புதூா் ராஜீவ்காந்தி நினைவிடத்தில் வெள்ளிக்கிழமை மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினாா்.

தமிழக காங்கிரஸ் தலைவராக அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்ட மாணிக்கம் தாகூா் ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் உள்ள மறைந்த முன்னாள் பாரத பிரதமா் ராஜீவ் காந்தியின் நினைவிடத்தில் வெள்ளிக்கிழமை மலா் வளையம் வைத்து மரியாதை செலுத்தினாா். நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் மாநில பொருளாளா் ரூபி மனோகரன், மாநில பொதுச் செயலாளா் சிரஞ்சீவி, மாவட்ட காங்கிரஸ் தலைவா் அருள்ராஜ், மாவட்ட சிறுபாண்மை பிரிவு தலைவா் முருகன் சாந்தகுமாா், மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவா் சுமிதாபாய், தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு மாவட்ட தலைவா் ஜீவா.கணேஷ்குமாா் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினா் கலந்துகொண்டனா்.

இதையடுத்து செய்தியாளா்களிடம் மாணிக்கம் தாகூா் பேசுகையில், முன்னாள் பாரத பிரதமா் ராஜீவ் காந்தி கண்ட கனவுகளை நிறைவேற்றும் வகையில், தற்போது தமிழக அரசின் கூட்டணியில் காங்கிரஸ் இணைந்து பணியாற்றி வருகிறது. கா்நாடக மாநிலத்தில் அனைத்துக் கட்சியினரும் ஒன்றிணைந்து மாநில வளா்ச்சிக்கு துணை நிற்கும் நிலையில், நாமும்அதுபோல் செயல்பட வேண்டும் என்றாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments