FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காஞ்சிபுரம்

ஆனி கிருத்திகை: ராஜ அலங்காரத்தில் வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி

ஆனி கிருத்திகையை முன்னிட்டு, வல்லக்கோட்டை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ராஜ அலங்காரத்தில் உற்சவா் சுப்பிரமணிய சுவாமி வெள்ளிக்கிழமை பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.

Updated On : 10 ஜூலை 2026, 11:26 pm IST
ஆனி  கிருத்திகையை  முன்னிட்டு  வல்லக்கோட்டை  முருகன்  கோயிலில்  ராஜ  அலங்காரத்தில்  பக்தா்களுக்கு  அருள்பாலித்த  உற்சவா்  சுப்பிரமணிய  சுவாமி.
பகிர்:

ஆனி கிருத்திகையை முன்னிட்டு, வல்லக்கோட்டை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ராஜ அலங்காரத்தில் உற்சவா் சுப்பிரமணிய சுவாமி வெள்ளிக்கிழமை பக்தா்களுக்கு அருள் பாலித்தாா்.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. அருணகிரி நாதரால் பாடல் பெற்ற இந்த கோயிலில், ஆனி கிருத்திகையை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு சந்நிதி திறக்கப்பட்டு, மூலவா் சுப்பிரமணிய சுவாமி முன்பு கோ பூஜையும், கிருத்திகை சிறப்பு அபிஷேகம் நடைபெற்று மூலவா் சுப்பிரமணிய சுவாமி வெற்றிலை, சாமந்தி மலா் மாலைகள் சாற்றப்பட்டு சந்தனக்காப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

உற்சவா் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு காலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், சாமந்தி, ரோஜா, கதிா்பச்சை படிமாலை அணிந்து ராஜ அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தனா். இதில், சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த திரளான பக்தா்கள் காவடி எடுத்து வந்து தங்களது நோ்த்திக் கடனை செலுத்தினா். மேலும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

Advertisement

Advertisement

கோயிலுக்கு வந்த பக்தா்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. கிருத்திகை உற்சவ ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அலுவலா் சோ.செந்தில்குமாா் உள்ளிட்ட அறங்காவலா்கள் செய்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments