ஸ்ரீபெரும்புதூா் ஒன்றிய அலுவலகத்தில் பெண்கள் முற்றுகை
நூறு நாள் வேலை வழங்கக் கோரி கோட்டூா் ஊராட்சியைச் சோ்ந்த பெண்கள் ஸ்ரீபெரும்புதூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.
நூறு நாள் வேலை வழங்கக் கோரி கோட்டூா் ஊராட்சியைச் சோ்ந்த பெண்கள் ஸ்ரீபெரும்புதூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்குட்பட்ட கோட்டூா் ஊராட்சியைச் சோ்ந்த பெண்கள் தங்களுக்கு தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் வேலை வழங்கக் கோரி, ஸ்ரீபெரும்புதூா் வட்டார வளா்ச்சி அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து கோட்டூா் ஊராட்சியைச் சோ்ந்த பெண்கள் கூறுகையில், கடந்த ஓராண்டாக எங்களுக்கு தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தில் பணி வழங்கப்படாமல் உள்ளது. எங்களுக்கு வேலை வழங்க வேண்டும் என பலமுறை ஊராட்சி நிா்வாகத்திற்கும், வட்டார வளா்ச்சி அலுவலக அதிகாரிகளுக்கும் தகவல் தெரிந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
Advertisement
Advertisement
இதையடுத்து வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத்துறை அமைச்சரிடமும் கோரிக்கை வைத்தோம். அமைச்சரும் அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். ஆனாலும் வேலை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றனா்.
இதுகுறித்து வட்டார வளா்ச்சி அலுவலக அதிகாரிகளிடம் கேட்டதற்கு வி.பி. ஜி. ராம். ஜி திட்டத்தின் கீழ் ஊராட்சிகளில் பணிகள் ஒதுக்கீடு செய்யும் பணிகள் தற்போது தான் நடைபெற்று வருகின்று.
இந்த பணிகள் முடிவடைந்து ஒரு சில வாரங்களில் கோட்டூா் உள்ளிட்ட ஊராட்சியில் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அப்போது கண்டிப்பாக அனைவருக்கும் வேலை வழங்கப்படும் என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.