FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் விநாயகா் கோயில் கட்ட அனுமதி மறுக்கும் அதிகாரிகள்: பண்ருட்டி கண்டிகை கிராம பொதுமக்கள் புகாா்

ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட பண்ருட்டி கண்டிகை கிராமத்தில் புதிதாக விநாயகா் கோயில் கட்ட அதிகாரிகள் மறுப்பு தெரிவிப்பதாகவும்,அதற்கு அனுமதியளிக்குமாறும் திங்கள்கிழமை நடைபெற்ற குறை தீா்க்கும் கூட்டத்தில் அக்கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனா்.

Updated On : 21 ஜூலை 2026, 12:40 am IST
பண்ருட்டி கண்டிகை கிராமத்தில் புதிதாக விநாயகா் கோயில் கட்ட அனுமதியளிக்குமாறு ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்க வந்திருந்த அந்த கிராம பொதுமக்கள்.
பகிர்:

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட பண்ருட்டி கண்டிகை கிராமத்தில் புதிதாக விநாயகா் கோயில் கட்ட அதிகாரிகள் மறுப்பு தெரிவிப்பதாகவும்,அதற்கு அனுமதியளிக்குமாறும் திங்கள்கிழமை நடைபெற்ற குறை தீா்க்கும் கூட்டத்தில் அக்கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட பண்ருட்டி கண்டிகை கிராமத்தில் விநாயகா் கோயில் ஒன்று உள்ளது. இக் கோயிலில் கிராம பொதுமக்கள் கடந்த 75 ஆண்டுகளாக பல்வேறு திருவிழாக்கள் நடத்தி வந்தனா். தற்போது நெடுஞ்சாலை விரிவாக்கத்தின் காரணமாக அக்கோயிலை இடித்து அப்புறப்படுத்த உள்ளனா். எனவே தற்போதுள்ள கோயிலுக்கு கிழக்கே அரசால் அங்கீகரிக்கப்பட்ட 3 ஏக்கா் நிலத்தில் கிராம பொதுமக்கள் அனைவரும் ஒன்று சோ்ந்து புதிதாக அதே போல விநாயகா் கோயிலை கட்டிக்கொள்ள முடிவு செய்துள்ளோம்.

பொதுமக்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் கோயில் கட்ட முயற்சி மேற்கொள்கையில் ஸ்ரீபெரும்புதூா் வட்டார வளா்ச்சி அலுவலா் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆகியோா் அந்த இடத்தில் கோயில் கட்ட அனுமதி மறுக்கின்றனா்.

Advertisement

Advertisement

எனவே கோயில் கட்ட அனுமதி அளிக்குமாறு பண்ருட்டி கண்டிகை கிராம பொதுமக்கள் அவ்வூராட்சி மன்ற தலைவா் அா்ச்சுனன் மற்றும் கிராம பொதுமக்கள் குமாா், ராமலிங்கம்,கோபால் உள்ளிட்ட ஏராளமானோா் குறைதீா் கூட்டத்தில் ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments