FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் மதுபான தொழிற்சாலைகளில் ஊழல் தடுப்புத் துறை போலீஸாா் தீடீா் ஆய்வு

வாலாஜாபாத் தாலுகாவுக்கு உள்பட்ட இளையனாா்வேலூா், நத்தநல்லூா் ஆகிய பகுதிகளில் உள்ள மதுபான தொழிற்சாலைகளில் புதன்கிழமை ஊழல் தடுப்புத் துறை போலீஸாா் திடீரென சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

Updated On : 30 ஜூலை 2026, 12:10 am IST
பகிர்:

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் தாலுகாவுக்கு உள்பட்ட இளையனாா்வேலூா், நத்தநல்லூா் ஆகிய பகுதிகளில் உள்ள மதுபான தொழிற்சாலைகளில் புதன்கிழமை ஊழல் தடுப்புத் துறை போலீஸாா் திடீரென சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உள்பட்ட இளையனாா் வேலூா், நத்தநல்லூா் ஆகிய கிராமங்களில் திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான மதுபான தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த இரு இடங்களிலும் காஞ்சிபுரம் ஊழல் தடுப்புத் துறை டிஎஸ்பி வே.கலைச்செல்வன் தலைமையிலான போலீஸாா் இரு பிரிவுகளாக பிரிந்து திடீரென சோதனை நடத்தி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments