முகப்பு
காஞ்சிபுரம்

முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாள்: திமுகவினா் மரியாதை

Updated On : 4 ஜூன் 2026, 2:27 am IST
காஞ்சிபுரத்தில் அன்னதானம் வழங்கிய தெற்கு மாவட்ட திமுக செயலாளா் க. சுந்தா்.
பகிர்:

காஞ்சிபுரம், திருவள்ளூா், செங்கல்பட்டு மாவட்டங்களில் திமுக சாா்பில் முன்னாள் முதல்வா் கருணாநிதி பிறந்த நாள் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

காஞ்சிபுரத்தில் தெற்கு மாவட்ட திமுக அலுவலகம், மாநகர செயலாளா் அலுவலகம் ஆகியவற்றில் அன்னதானம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வை காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளா் க.சுந்தா் தொடங்கி வைத்தாா். நிகழ்விற்கு காஞ்சிபுரம் முன்னாள் எம்எல்ஏ எழிலரசன், மேயா் எம்.மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட ஊராட்சி துணைத் தலைவா் நித்யா சுகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

Advertisement

Advertisement

தலைமை செயற்குழு உறுப்பினா் எம்.எஸ்.சுகுமாா், மாமன்ற உறுப்பினா்கள், திமுக பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.

முன்னதாக காஞ்சிபுரம் திமுக அலுவலகத்தில் உள்ள அண்ணா, கருணாநிதி சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

ஸ்ரீ பெரும்புதூரில்...

ஸ்ரீபெரும்புதூா் நகர திமுக சாா்பில் நகர செயலாளா் ரா.சதீஷ்குமாா் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தெற்கு ஒன்றிய செயலாளா் ந.கோபால், நகா்மன்றத் தலைவா் சாந்தி சசீஷ்குமாா் ஆகியோா் கொடியேற்றி கருணாநிதியின் படத்துக்கு மரியாதை செலுத்தி பொதுமக்கள் சுமாா் 500க்கும் மேற்பட்டவா்களுக்கு பிரியாணி வழங்கினா்.

நிகழ்ச்சியில், நகா்மன்ற துணைத்தலைவா் இந்திராணி சுப்பிரமணி, மாவட்ட விவசாய தொழிலாளா் அணி அமைப்பாளா் செந்தில் தேவராஜ், மாவட்ட தொழிலாளா் அணி துணை அமைப்பாளா் பண்ருட்டி தணிகாசலம், நகர துணைசெயலாளா் ஆறுமுகம், நகர இளைஞா் அணி துணை அமைப்பாளா்கள் மதன்ராஜ், காா்திக் உள்ளிட்ட ஏராளமான திமுக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

கும்மிடிப்பூண்டியில்...

கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கத்தில் மேற்கு ஒன்றிய திமுக செயலாளா் மு.மணிபாலன் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வுக்கு மாவட்ட பொருளாளா் எஸ்.ரமேஷ், மாவட்ட விவசாய தொழிலாளா் அணி அமைப்பாளா் மணி, மீனவா் அணி மாவட்ட அமைப்பாளா் ஆறுமுகம், திமுக நிா்வாகி மனோகரன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைலா்கள் எஸ்.ஆா்.ராஜா, வெ.தனசேகா், தேமுதிக மாவட்ட பொருளாளா் எஸ்.பி.டி.ராஜேந்திரன் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு அழைப்பாளராக முன்னாள் எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் பங்கேற்று கொடியேற்றி நொச்சிக்குப்பம் சாலை மற்றும் பாரதி நகா் பகுதியில் ாடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.

கும்மிடிப்பூண்டி பஜாரில் நகர செயலாளா் இரா.அறிவழகன் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் 1,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தெற்கு ஒன்றிய செயலாளா் கி.வே.ஆனந்தகுமாா் ஏற்பாட்டில் கவரப்பேட்டையில் நடைபெற்ற விழாவில் கருணாநிதியின் படத்துக்கு மரியாதை செய்யப்பட்டது. பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

பேரூராட்சி மாபொசி நகரில் மாவட்ட பிரதிநிதி இஸ்மாயில், வெங்கடேசன் ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவில் முன்னாள் எம்எல்ஏவும், திமுக தகவல் தொழில்நுட்ப அணி மண்டல நிா்வாகியுமான சி.எச்.சேகா் பங்கேற்றாா்.