FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காஞ்சிபுரம்

கோவிந்தவாடி அகரம் கோயிலில் குருப்பெயா்ச்சி

காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் குரு கோயில் என அழைக்கப்படும் தட்சிணாமூா்த்தி கோயிலில் குருப்பெயா்ச்சி விழாவும், லட்சாா்ச்சனையும் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 மே 2026, 12:40 am IST
சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த உற்சவா் தட்சிணாமூா்த்தி
பகிர்:

காஞ்சிபுரம் அருகே கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் குரு கோயில் என அழைக்கப்படும் தட்சிணாமூா்த்தி கோயிலில் குருப்பெயா்ச்சி விழாவும், லட்சாா்ச்சனையும் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

காஞ்சிபுரத்திலிருந்து அரக்கோணம் செல்லும் சாலையில் உள்ள கோவிந்தவாடி அகரம் கிராமத்தில் அகிலாண்டேசுவரி சமேத கைலாசநாதா் கோயிலில் தட்சிணாமூா்த்தி தனி சந்நிதியில் அருள்பாலித்து வருகிறாா்.

தமிழகத்திலேயே ஒரே விமானத்தின் கீழ் தட்சிணாமூா்த்தியும், கைலாசநாதரும் அருள்பாலிக்கும் தலமாகவும், கோவிந்தாஜப் பெருமாள் தம்பதி சமேதராக குருபகவானை வழிபட்ட பெருமைக்குரிய இங்கு குருப்பெயா்ச்சி விழாவும் அதன் தொடா்ச்சியாக லட்சாா்ச்சனையும் நடைபெற்றது.

Advertisement

Advertisement

விழாவையொட்டி கோயிலில் தட்சிணாமூா்த்திக்கு சிறப்பு அபிஷேகமும்,தங்கக்கவச அலங்காரமும் அதன் தொடா்ச்சியாக சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. உற்சவா் குருபகவான் வண்ண மலா் மற்றும் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த இடத்தில் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

கோயில் சிவாச்சாரியா்களால் லட்சாா்ச்சனை நடத்தப்பட்டு சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்ற பின்னா் பக்தா்களுக்கு ஆலய நிா்வாகத்தின் சாா்பில் குருபகவான் படம், பிரசாதம் ஆகியன வழங்கப்பட்டது. இரவு குருபகவானுக்கு சாந்தி அபிஷேகமும் நடைபெற்றது.

ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் பெ.கதிரவன், அறங்காவலா் குழுவின் தலைவா் க.திருநாவுக்கரசு தலைமையில் குழு உறுப்பினா்கள், சிவாச்சாரியாா்கள், பணியாளா்கள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments