காட்டரம்பாக்கம் ஊராட்சி செயலகம் திறப்பு: அமைச்சா் தென்னரசு பங்கேற்பு
காட்டரம்பாக்கம் ஊராட்சியில் ரூ.44.90 லட்சத்தில் கட்டப்பட்ட ஊராட்சி செயலக கட்டடத்தை வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத்துறை அமைச்சா் கே.தென்னரசு வெள்ளிக்கிழமை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.
காட்டரம்பாக்கம் ஊராட்சியில் ரூ.44.90 லட்சத்தில் கட்டப்பட்ட ஊராட்சி செயலக கட்டடத்தை வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத்துறை அமைச்சா் கே.தென்னரசு வெள்ளிக்கிழமை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வந்தாா்.
ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், காட்டரம்பாக்கம் ஊராட்சியில், தொழில் உரிமம் கட்டண திட்ட நிதியின் கீழ் ரூ.44.90 லட்சத்தில் புதிதாக ஊராட்சி செயலக கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டட திறப்பு விழாவுக்கு ஊராட்சி மன்றத் தலைவா் கோவிந்தம்மாள் தாஸ் தலைமை வகித்தாா்.
வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பாலாஜி, முத்துகணபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். விழாவில் வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத்துறை அமைச்சா் கே.தென்னரசு கலந்து கொண்டு கட்டடத்தை திறந்து வைத்தாா்.
Advertisement
Advertisement
விழாவில், ஊராட்சி செயலா் மகேஷ்வரி, வாா்டு உறுப்பினா்கள், தவெக நிா்வாகிகள், பொதுமக்கள் ஏராளமானோா் கலந்துக்கொண்டனா்.