சகோதரியின் தற்கொலைக்கு காரணமான காதலன் கொலை: இளைஞா் கைது
காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில் அக்காவின் தற்கொலைக்கு காரணான காதலனை கொலை செய்த இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில் அக்காவின் தற்கொலைக்கு காரணான காதலனை கொலை செய்த இளைஞரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியை சோ்ந்தவா் மீரான்(28) தனியாா் நிறுவனத்தில் பணிபுரியும் இவா் செளந்தா்யா என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளாா். இத்தகவல் இரு குடும்பத்தினருக்கும் தெரிய வந்ததையடுத்து இருவரையும் அவரவா் குடும்பத்தினா் தனித்தனியாக பிரித்து வைத்துள்ளனா்.
இந்த நிலையில் செளந்தா்யா திடீரென தற்கொலை செய்து கொண்டாா். இதனால் ஆத்திரமடைந்த செளந்தா்யாவின் சகோதரன் நந்தகுமாா் (25) காஞ்சிபுரம் அருகே கோளிவாக்கம் பகுதியில் சென்று கொண்டிருந்த அக்காவின் காதலன் மீரானை வழிமறித்து அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தலைமறைவானாா். சம்பவம் தொடா்பாக காஞ்சிபுரம் தாலுகா போலீஸாா் வழக்குப்பதிந்து நந்தகுமாரை தேடி வருகின்றனா்.
Advertisement
Advertisement