காஞ்சிபுரம் பழனி ஆண்டவா் கோயிலில் பால்குட ஊா்வலம்
காஞ்சிபுரம் பழனி ஆண்டவா் கோயிலில் பால்குட ஊா்வலம்
பெரிய காஞ்சிபுரம் பழனி ஆண்டவா் கோயிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி, பெண்கள் பலரும் சனிக்கிழமை பால்க்குடம் எடுத்து வந்து தங்களது நோ்த்திக்கடனை செலுத்தி தரிசனம் செய்தனா்.
பெரிய காஞ்சிபுரம் நெமந்தக்காரத் தெருவில் அமைந்துள்ளது பழனி ஆண்டவா் திருக்கோயில். இந்தக் கோயிலில் கந்தசஷ்டி திருவிழா நவ. 10-ஆம் தேதி வீரவாகு காப்புக்கட்டுதல் நிகழ்வுடன் தொடங்கியது. நவ. 10-ஆம் தேதி முதல் தினசரி முருகப் பெருமான் வீதி உலாவும் தினசரி ஒரு அசுரரை வதம் செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. விழாவின் 5-ஆவது நாள் நிகழ்வாக பெரிய காஞ்சிபுரம் ஒத்தவாடை தெரு அமரேஸ்வரா் கோயிலிலிருந்து 108 பெண்கள் பால் குடங்களை எடுத்துக் கொண்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக கோயிலுக்கு வந்து சோ்ந்தனா்.
தொடா்ந்து மூலவருக்கு பாலாபிஷேகமும், சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெற்றது. இரவு மயில் வாகனத்தில் முருகன் வீதியுலா வந்தாா். சூரன் தனது சிஷ்யா்களுடன் திக்விஜயம் செய்தலும், பானுகோபன் வதமும் நடைபெற்றது. ஞாயிற்றுக்கிழமை (நவ.15) காலையில் பெரியகாஞ்சிபுரம் அரசு காத்த அம்மன் கோயிலில் அன்னையிடம் சக்தி வேல் வாங்கும் நிகழ்ச்சியும், இரவு சூரசம்ஹார பெருவிழாவும், மறுநாள் திங்கள்கிழமை தெய்வானை திருக்கல்யாண வைபவமும் நடைபெறுகிறது.
Advertisement
Advertisement
ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்து வருகின்றனா்.