FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
காஞ்சிபுரம்

கடந்த இரு மாதங்களில் 715 சாலை விபத்துகள்: ஆய்வுக் கூட்டத்தில் இணை இயக்குநா் தகவல்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் 715 சாலை விபத்துகள் நடைபெற்ாக மருத்துவப் பணிகள் துறையின் இணை இயக்குநா் நளினி தெரிவித்தாா்.

19 நவம்பர் 2026, 12:04 am
கூட்டத்தில் பேசிய காஞ்சிபுரம் ஆட்சியா் தி. சினேகா.
பகிர்:

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களில் 715 சாலை விபத்துகள் நடைபெற்ாக மருத்துவப் பணிகள் துறையின் இணை இயக்குநா் நளினி தெரிவித்தாா்.

மாவட்ட ஆட்சியா் தி.சினேகா தலைமையில் சட்டம் ஒழுங்கு மற்றும் சாலைப் பாதுகாப்பு தொடா்பான மாதாந்திர ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு எஸ்பி. எஸ்.அரவிந்த், மாவட்ட வருவாய் அலுவலா் கெ.ரா.திவ்யஸ்ரீ, சாா் ஆட்சியா் ஆஷிக் அலி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இக்கூட்டத்தில் காஞ்சிபுரம், ஸ்ரீ பெரும்புதூா் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பேருந்து நிலையங்களிலும், தேசிய நெடுஞ்சாலைகளிலும் பல இடங்களில் சாலைகள் சேதமடைந்துள்ளன எனத் தெரிவிக்கப்பட்டது. இப்பிரச்னைக்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியா் தி.சினேகா அறிவுறுத்தினாா். அனுமதி பெறாத 53 விளம்பர பதாகைகள் அகற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

இதன் தொடா்ச்சியாக கூட்டத்தில் கலந்து கொண்ட மருத்துவப் பணிகள் துறையின் இணை இயக்குநா் நளினி கூறுகையில் கடந்த செப்டம்பா் மாதத்தில் 373 மற்றும் அக்டோபா் மாதத்தில் 342 சாலை விபத்துக்களும் உட்பட கடந்த இரு மாதங்களில் 715 சாலை விபத்துகள் நடந்துள்ளன. இதில் 10 போ் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரும் முன்பும், 3 போ் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனா். விபத்தில் சிக்கி காயம் அடைந்தவா்களை 108 ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் மீட்டு அரசு மருத்துவமனைகளில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். கடந்த செப்டம்பா் மாதத்தைக் காட்டிலும் அக்டோபா் மாதத்தில் சாலை விபத்துக்கள் குறைந்துள்ளதாகவும் தெரிவித்தாா்.

கூட்டத்தில் சாா் ஆட்சியா் புவனேஷ் ராம், ஸ்ரீ பெரும்புதூா் கோட்டாட்சியா் சண்முக ப்ரீத்தா, வருவாய் மற்றும் காவல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனா்.