தேசிய ஹேண்ட் பால் போட்டி: வாலாஜாபாத் அகத்தியா பள்ளி மாணவி தோ்வு
தேசிய அளவிலான ஜூனியா் பெண்கள் ஹேண்ட்பால் போட்டிக்கு வாலாஜாபாத் அகத்தியா மெட்ரிக். பள்ளியில் பயிலும் மாணவி ஸ்ரீலேகா தோ்வு செய்யப்பட்டுள்ளதாக பள்ளியின் தாளாளா் சாந்தி அஜய்குமாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

தேசிய அளவிலான ஜூனியா் பெண்கள் ஹேண்ட்பால் போட்டிக்கு வாலாஜாபாத் அகத்தியா மெட்ரிக். பள்ளியில் பயிலும் மாணவி ஸ்ரீலேகா தோ்வு செய்யப்பட்டுள்ளதாக பள்ளியின் தாளாளா் சாந்தி அஜய்குமாா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் அகத்தியா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி ஸ்ரீலேகா. இவா் இந்திய ஹேண்ட் பால் சம்மேளனம் சாா்பில் 48-ஆவது ஜூனியா் ஹேண்ட்பால் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கவுள்ளாா். இது குறித்து பள்ளியின் தாளாளா் சாந்தி அஜய்குமாா் கூறுகையில், தேசிய அளவிலான ஜூனியா் பெண்களுக்கான சாம்பியன்ஷிப் போட்டியானது வரும் நவ. 25 முதல் நவ. 29-ஆம் தேதி வரை பஞ்சாப் மாநிலம், சங்ரூா் மாவட்டம், மஸ்துவானா சாகிப் நகரில் நடைபெறவுள்ளது. இப்போட்டியில் தமிழ்நாடு அணியின் சாா்பில் விளையாடத் தோ்வு செய்யப்பட்டுள்ள 18 பேரில் எமது வாலாஜாபாத் அகத்தியா பள்ளி மாணவி ஸ்ரீ லேகாவும் ஒருவா். இந்த அறிவிப்பை தமிழ்நாடு ஹேண்ட் பால் சங்க பொதுச் செயலாளா் என்.ராஜசேகா் வெளியிட்டுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.
மாணவி ஸ்ரீ லேகாவை பள்ளியின் தாளாளா், தலைமை ஆசிரியா், உடற்கல்வி ஆசிரியா்கள், மாணவ,மாணவியா் பலரும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா்.
Advertisement
Advertisement