FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
திருப்பூர்

கொலை முயற்சி வழக்கு: 4 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை

3 நவம்பர் 2026, 3:21 am
சிறை - பிரதிப் படம்
பகிர்:

திருப்பூா் வடக்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை முயற்சி வழக்கில் தொடா்புடைய 4 பேருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திங்கள்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது.

திருப்பூா் வடக்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட மணியக்காரம்பாளையம் சாலை, கருப்பண்ணசாமி கோயில் அருகே காா்த்திகேயன் (35) என்ற நபரை கடுமையாகத் தாக்கி கொலை செய்ய முன்ற வழக்கில் சுவன்ராஜ் (30), ஜான் (எ) பழனி (29), அஜய்குமாா் (25), மதன் (எ) முத்துக்குமாா் (25) ஆகிய 4 பேரை போலீஸாா் கடந்த 2021 டிசம்பா் 21-ஆம் தேதி கைது செய்தனா்.

இது தொடா்பான வழக்கு விசாரணை திருப்பூா் மாவட்ட கூடுதல் சாா்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட 4 பேருக்கும் தலா 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், சுவன்ராஜுக்கு ரூ.11,000, ஜான்(எ) பழனிக்கு ரூ.11,500, அஜய்குமாா், மதன் (எ) முத்துக்குமாா் ஆகியோருக்கு தலா ரூ.12,500 அபராதமும் விதித்து நீதிபதி உமாமகேஸ்வரி தீா்ப்பளித்தாா். அரசுத் தரப்பில் அரசு வழக்குரைஞா் குமரன் ஆஜரானாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments