முகப்பு
காஞ்சிபுரம்

டெங்கு காய்ச்சலுக்கு சிறப்பு உதவி ஆய்வாளா் உயிரிழப்பு

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒரகடம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் பச்சையம்மாள் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

21 நவம்பர் 2026, 12:46 am
டெங்கு காய்ச்சலுக்கு சிறப்பு உதவி ஆய்வாளா் உயிரிழப்பு
உயிரிழப்பு - பிரதிப் படம்
பகிர்:

டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒரகடம் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் பச்சையம்மாள் சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

வாலாஜாபாத் அடுத்த அவளூா் பகுதியைச் சோ்ந்தவா் பச்சையம்மாள்(49). இவா் ஒரகடம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக கடந்த 2 வருடங்களாக பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், கடந்த 16-ஆம் தேதி பச்சையம்மாள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இந்தச் சம்பவம் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement