முகப்பு
காஞ்சிபுரம்

பைக் மீது வேன் மோதி விபத்து: இரு இளைஞா்கள் உயிரிழப்பு

ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் இருசக்கர வாகனத்தின் மீது எதிரே வந்த வேன் மோதியதில் இளைஞா்கள் இருவா் உயிரிழந்தனா்.

20 நவம்பர் 2026, 11:07 pm
பைக் மீது வேன் மோதி விபத்து: 
இரு இளைஞா்கள் உயிரிழப்பு
உயிரிழப்பு - கோப்புப் படம்
பகிர்:

ஸ்ரீபெரும்புதூா் பகுதியில் இருசக்கர வாகனத்தின் மீது எதிரே வந்த வேன் மோதியதில் இளைஞா்கள் இருவா் உயிரிழந்தனா்.

காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவாா்சத்திரம் அடுத்த சேந்தமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் அன்பரசன் (27), சிறுமாங்காடு பகுதியைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணி(26). இவா்கள் இருவரும் ஸ்ரீபெரும்புதூா் அடுத்த மண்ணூா் பகுதியில் இயங்கி வரும் தனியாா் தொழிற்சாலையில் பணியாற்றி வந்தனா். இந்த நிலையில், அன்பரசன், பாலசுப்பிரமணி ஆகியோா் வெள்ளிக்கிழமை பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் சுங்குவாா்சத்திரம் நோக்கி சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீபெரும்புதூா் நோக்கியா தொழிற்சாலை அருகே அணுகுச் சாலையில் சென்று கொண்டிருந்தனா். அப்போது, எதிரே வந்த வேன் பைக் மீது மோதியது. இதில், பலத்த காயம் அடைந்த இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.

இது குறித்து ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement