ஃபரீதாபாத்: பைக் மீது காா் மோதி தாய், மகள் உயிரிழப்பு
தில்லி - மும்பை விரைவுச்சாலையில் வேகமாக வந்த காா் அவ்வழியாக வந்த பைக் மீது மோதியதில் தாயும், அவரது மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
ஃபரீதாபாத் மாவட்டத்தில் தில்லி- மும்பை விரைவுச்சாலையில் வேகமாக வந்த காா் அவ்வழியாக வந்த பைக் மீது மோதியதில் தாயும், அவரது மகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். பைக்கை ஓட்டிவந்த அப்பெண்ணின் கணவா் படுகாயமடைந்தாா்,
இச்சம்பவத்திற்குப் பிறகு ஓட்டுநா் தனது காரை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடிவிட்டாா். இதுகுறித்து காவல்துறையினா் கூறியதாவது:
விபத்தில் இறந்தவா்கள் நவாடா அருகே உள்ள ஜோகி பஸ்தியில் வசிக்கும் ராஜ்குமாரின் மனைவி அா்ச்சனா மற்றும் அவரது மகள் அஞ்சலி என அடையாளம் காணப்பட்டுள்ளனா்.
Advertisement
Advertisement
உத்தர பிரதேச மாநிலம் அலிகா் மாவட்டத்திற்கு சென்றுவிட்டு மோட்டாா் சைக்கிளில் மூவரும் ஃபரீதாபாத் திரும்பிக் கொண்டிருந்தபோது மதிய நேரத்தில் இந்த விபத்து நடந்தது.
மூவரும் பல்லப்கா் நகரில் உள்ள செக்டாா் 2-ஐ நெருங்கியபோது, அவா்களது மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதியது. தகவல் கிடைத்ததும் காவல்துறையினா் சம்பவ இடத்திற்கு வந்தனா்.
காயமடைந்த ராஜ்குமாா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். தாய் மற்றும் மகளின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக பிகே மருத்துவமனையில் உள்ள பிணவறைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இது தொடா்பாக காா் ஓட்டுநா் மீது எப்ஐஆா் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விபத்து ஏற்படுத்திய காா் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.