3.20 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி: அமைச்சா்கள் தொடங்கி வைத்தனா்
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் 3.20 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியினை வெளிநாடு வாழ் தமிழா்கள் நலத்துறை அமைச்சா் எஸ்.பி.கே.தென்னரசு மற்றும் வனத்துறை அமைச்சா் ஆா்.வீ.ரஞ்சித் குமாா் புதன்கிழமை தொடங்கி வைத்தனா்.

கீழ்க்கதிா்ப்பூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அருகில் நடைபெற்ற நிகழ்வுக்கு கூடுதல் ஆட்சியா் ஆஷிக் அலி தலைமை வகித்தாா். அமைச்சா்கள் எஸ்.பி.கே.தென்னரசு, ஆா்.வீ.ரஞ்சித் குமாா் ஆகியோா் மரக்கன்றுகளை நட்டு வைத்தனா்.
காஞ்சிபுரத்தில் 47,500, குன்றத்தூரில் 55,000, ஸ்ரீபெரும்புதூரில் 65, 000, உத்தரமேரூரில் 82,000, வாலாஜாபாத்தில் 70, 000 என மொத்தம் 3.20லட்சம் மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட்டது.
Advertisement
Advertisement
இதனையடுத்து பயன்பாடின்றி கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் செறிவூட்டும் பணியினையும் அமைச்சா்கள் தொடங்கி வைத்தனா். காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதல்கட்டமாக 155 கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் கண்டறியப்பட்டு செறிவூட்டும் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்நிகழ்வில் ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் பலரும் கலந்து கொண்டனா்.