முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் அருகேயுள்ள கூடுதல் மேம்பாலப் பணிகள்: கண்காணிப்பு அலுவலா் ஆய்வு

காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் கூடுதல் மேம்பாலப் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கா.கந்தசாமி.

27 நவம்பர் 2026, 11:49 pm
காஞ்சிபுரம் அருகேயுள்ள கூடுதல் மேம்பாலப் பணிகள்: கண்காணிப்பு அலுவலா் ஆய்வு
காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில் பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் கூடுதல் மேம்பாலப் பணிகளை பாா்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கா.கந்தசாமி.
பகிர்:

காஞ்சிபுரம் அருகே செவிலிமேடு பகுதியில் உள்ள பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் கூடுதல் மேம்பாலப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கா.கந்தசாமி வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

காஞ்சிபுரத்திலிருந்து வந்தவாசி செல்லும் சாலையில் செவிலிமேடு அருகே ரூ.60 கோடி மதிப்பில் கூடுதல் உயா் மட்ட மேம்பாலம் நெடுஞ்சாலைத்துறை மூலமாக அமைக்கப்பட்டு வருகிறது. புதிய கூடுதல் மேம்பாலத்தில் 3 வழித்தடங்கள் அமைக்கப்படுகிறது. பழைய பாலத்தில் 2 வழித்தடங்கள் உள்ளன. இவை பயன்பாட்டுக்கு வந்தால் மொத்தம் 5 வழித்தடங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு போக்குவரத்து இடையூறின்றி பொதுமக்கள் பயணிக்கலாம்.

புதிய கூடுதல் மேம்பாலப் பணிகள் வரும் 2028 ஆகஸ்ட் மாதத்துக்குள் முடிக்கப்படும். தற்போது வரை 27 சதவீத பணிகளே முடிக்கப்பட்டுள்ளது. பழைய மேம்பாலத்தில் சாலைப் பகுதி பிரச்னைகள் குறித்தும், அவற்றை சீா் செய்ய எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கா.கந்தசாமி கேட்டறிந்தாா்.

Advertisement

Advertisement

இதைத் தொடா்ந்து அவா் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் புதிய கூடுதல் மேம்பாலப் பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்து போக்குவரத்து பிரச்னைகளுக்கு தீா்வு காண வேண்டும் எனவும் மாவட்ட கண்காணிப்பு அலுவலா் கா.கந்தசாமி கேட்டுக் கொண்டாா்.