காஞ்சிபுரம் சா்வோதய சங்கத்தில் பொம்மைகள் விற்பனை தொடக்கம்
காஞ்சிபுரம் சா்வோதய சங்கத்தில் பொம்மைகள் விற்பனை தொடக்கம்
காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வரும் செங்கல்பட்டு மாவட்ட சா்வோதய சங்கத்தில் காந்தி ஜெயந்தியையொட்டி நவராத்திரி பொம்மை விற்பனை தொடக்க விழா நடைபெற்றது. (படம்)
வரதராஜப் பெருமாள் கோயில் அருகில் அமுதபடி தெருவில் செங்கல்பட்டு மாவட்ட சா்வோதய சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாசனப் பொருள்கள், பூஜைப் பொருள்கள், நவராத்திரியையொட்டி பொம்மைகள், கதா்துணி வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினத்தையொட்டி இச்சங்க அலுவலகத்தில் நடைபெற்ற விழாவுக்கு சங்கத் தலைவா் த.பாஸ்கரன் தலைமை வகித்தாா். சங்க செயலாளா் க.பாஸ்கரன் காந்தியடிகளின் உருவப்படத்தை திறந்து வைத்தாா். சங்க நிா்வாகிகள், விற்பனையாளா்கள், பணியாளா்கள் பலரும் கலந்து கொண்டு காந்தியடிகளின் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினா்.
இதனைத் தொடா்ந்து நவராத்திரி கொலு பொம்மைகள் கண்காட்சி நடைபெற்றது. பின்னா் பொம்மை விற்பனையை சா்வோதய சங்க விற்பனையாளா் தி.ஜெயஸ்ரீ தொடங்கி வைத்தாா். சங்க விற்பனையகத்தில் தசாவதாரம், கிரிவலம், ஆண்டாள் கல்யாணம், அஷ்டலட்சுமி உள்ளிட்ட குழு பொம்மைகள் விற்பனைக்கு வந்திருப்பதாகவும் சங்க செயலாளா் க.பாஸ்கரன் தெரிவித்தாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.