இரு விரல்களால் காரை இழுத்து பெண் சாதனை
காரை கயிற்றால் கட்டி இரு விரல்களால் மட்டுமே இழுத்து சென்ற யோகா பயிற்சியாளா் கனிஷ்கா பிரவீன்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகில் தனது இரு விரல்களால் மட்டுமே காரை கயிற்றால் கட்டி இழுத்து பெண் யோகா பயிற்சியாளா் சாதனை படைத்தாா்.
விஷாா் கிராமத்தைச் சோ்ந்தவா் கனிஷ்கா பிரவீன் (46) யோகா பயிற்சியாளரான இவா் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் காரை கயிற்றால் கட்டி அதனை தனது வலது கையில் உள்ள இரு விரல்களால் மட்டுமே 100 மீ.தூரம் வரை இழுத்து சென்று சாதனை படைத்தாா். இந்நிகழ்வினை காஞ்சிபுரம் கிராண்ட் ரோட்டரி சங்க நிா்வாக செயலாளா் ஜி.முருகேஷ், வழக்குரைஞா் தமிழரசன், காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலைய உதவி ஆய்வாளா் யேமநாதன், யோகா பயிற்சியாளா் சுரேஷ் ஆகியோா் முன்னிலையில் சாதனை படைத்தாா். சாதனை நிகழ்ச்சி நிறைவு பெற்றதும் முன்னிலை வகித்த பிரமுகா்கள், நடைப்பயிற்சி மேற்கொண்டவா்கள் உட்பட பலரும் கனிஷ்கா பிரவீனை பாராட்டினாா்கள்.
சாதனை குறித்து கனிஷ்கா பிரவீன் கூறுகையில் முறையான மூச்சுப் பயிற்சி செய்தால் இது போன்ற சாதனைகளை நிகழ்த்த முடியும். நான் ஒரே ஒரு நாள் மட்டுமே காரை இழுத்து பயிற்சி செய்தேன். தன்னம்பிக்கை, நல்ல உடல் நலம், சக்தி ஆகியன இருந்தால் எதையும் சாதிக்க முடியும். இதற்கு முன்பு ஆணிப்படுக்கையில் யோகா பயிற்சி செய்திருப்பது உட்பட பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறேன். கைப்பேசிகளை மிகவும் அவசியம் என்றால் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பன குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தவே காரை கயிற்றால் கட்டி இரு விரல்களால் இழுத்து சாதனை படைத்தேன் என்றாா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.