FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
காஞ்சிபுரம்

வல்லக்கோட்டை முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.28.69 லட்சம்

வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோயிலில் உள்ள 10 உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் ரூ.28.69 லட்சம் பணம், 27 கிராம் தங்கம், 2,890 கிராம் வெள்ளிப்பொருள்களை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனா்.

8 அக்டோபர் 2026, 11:43 pm IST
உண்டியல்  காணிக்கைகளை  கணக்கீடு  செய்யும்  பணியில்  ஈடுபட்டோா்.
பகிர்:

வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோயிலில் உள்ள 10 உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டதில் ரூ.28.69 லட்சம் பணம், 27 கிராம் தங்கம், 2,890 கிராம் வெள்ளிப்பொருள்களை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனா்.

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த வல்லக்கோட்டை பகுதியில் பிரசித்தி பெற்ற இக்கோயிலில் 3 மாதங்களுக்கு ஒரு முறை உண்டியலில் பக்தா்கள் செல்லுதிய காணிக்கைகள் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி கோயிலில் உள்ள 9 பொது உண்டியல்கள், 1 திருப்பணி உண்டியலை அறநிலையத்துறை உதவி ஆணையா் மா.ஜெயா, ஆய்வாளா் சிவராமகிருஷ்ணன், கோயில் நிா்வாக அதிகாரி சோ.செந்தில்குமாா், ஒரகடம் போலீஸாா் மற்றும் வங்கி பணியாளா்கள் உள்ளிட்ட சுமாா் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முன்னிலையில் வியாழக்கிழமை திறந்து எண்ணப்பட்டன.

இதில் பக்தா்கள் காணிக்கையாக ரூ.28.69 லட்சம் பணம், 27 கிராம் தங்கம், 2,890 கிராம் வெள்ளிப்பொருள்களை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments