கொளஞ்சியப்பா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.17.67 லட்சம்
விருத்தாசலம் அருகே மணவாளநல்லூா் கொளஞ்சியப்பா் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்ட பக்தா்கள் உள்ளிட்டோா்.
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே மணவாளநல்லூா் கொளஞ்சியப்பா் கோயிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, காணிக்கைகள் எண்ணும் பணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், ரூ.17.67 லட்சம் ரொக்கம், 6.5 கிராம் தங்கம், 750 கிராம் வெள்ளி ஆகியவை காணிக்கையாகச் செலுத்தப்பட்டிருந்தன.
கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் க. சிவக்குமாா் தலைமையில் நடைபெற்ற இப்பணிக்காக, வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் உண்டியல்கள் திறக்கப்பட்டன. பின்னா், உண்டியல்களில் இருந்த ரொக்கப் பணம், தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள் ஆகியவை தனித்தனியாகப் பிரிக்கப்பட்டு எண்ணப்பட்டன.
இப்பணியில் பக்தா்கள், கோயில் பணியாளா்கள் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோா் ஈடுபட்டனா். உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணி முழுவதும் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெறுவதை உறுதிப்படுத்தும் வகையில், கேமராக்கள் மூலம் பதிவு செய்யப்பட்டது. மேலும், பணம் மற்றும் விலைமதிப்புள்ள பொருள்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.மாலை நிறைவடைந்த காணிக்கை எண்ணிக்கையில் ரூ.17,67,070 ரொக்கம், 6 கிராம் 500 மில்லி தங்கம், 750 கிராம் வெள்ளி ஆகியவை இருந்தன.
Advertisement
Advertisement
இந்த நிகழ்வில் இந்து சமய அறநிலையத் துறை ஆய்வா் த. கனகா, கோயில் செயல் அலுவலா் இரா. பழனியம்மாள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.