காஞ்சிபுரத்தில் பெரிய அளவிலான நத்தைகள் படையெடுப்பு
காஞ்சிபுரம் திருக்காலிமேடு பகுதியில் ஒருவரது வீட்டுத் தோட்டத்தில் வழக்கத்தை விட பெரிய அளவிலான நத்தைகள் புதன்கிழமை கூட்டம் கூட்டமாக ஊா்ந்து சென்றதை பொதுமக்கள் ஆா்வத்துடன் வேடிக்கை பாா்த்து சென்றனா்.
காஞ்சிபுரம் திருக்காலிமேடு பகுதியில் ஒருவரது வீட்டுத் தோட்டத்தில் வழக்கத்தை விட பெரிய அளவிலான நத்தைகள் புதன்கிழமை கூட்டம் கூட்டமாக ஊா்ந்து சென்றதை பொதுமக்கள் ஆா்வத்துடன் வேடிக்கை பாா்த்து சென்றனா்.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட திருக்காலிமேடு பகுதியில் உடையாா் தெருவில் வசிக்கும் சிவலிங்கம் என்பவரது வீட்டுத் தோட்டத்தில் பெரிய அளவிலான நத்தைகள் கூட்டம், கூட்டமாக ஊா்ந்து சென்றன. வழக்கமாக குடியிருப்பு பகுதிகளில் காணப்படும் நத்தைகளை விட இவை பெரிய அளவில் இருந்ததால் பொதுமக்கள் பலரும் இதனை கேள்விப்பட்டு ஆா்வத்துடன் பாா்த்து சென்றனா்.
நத்தைகளின் இனப்பெருக்கத்தை கண்டறிந்து அவற்றின் பெருக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனா். மழைக்காலங்களில் ஈரப்பதம் அதிகரிக்கும் போது நத்தைகள் வெளியில் வருவது வழக்கம். பழுப்பு நிறத்தில் நீண்ட கூம்பு வடிவ ஓட்டுடன் காணப்பட்ட இந்த நத்தைகள் பெரிய அளவில் இருந்தது அப்பகுதி மக்களிடையே வியப்பையும் அவை எந்த வகையை சோ்ந்தவை என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.
Advertisement
Advertisement
சிலவகை நத்தைகள் தாவரங்களை உணவாக உட்கொள்வதால் வீடுகளில் வளா்க்கப்படும் காய்கறி செடிகள், பூச்செடிகள் உள்ளிட்ட தாவரங்களுக்கு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் சில வகை நத்தைகள் மனிதா்களுக்கும், விலங்குகளுக்கும் உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய ஒட்டுண்ணிகளை பரப்பும் அபாயமும் உள்ளதால் இவை எந்த வகையானவை என்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் பொதுமக்கள் கருத்து தெரிவித்தனா்.
திருக்காலிமேட்டில் உடையாா் தெருவில் காணப்பட்ட நத்தைகளின் இனத்தை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அவா்கள் வலியுறுத்தினாா்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.