FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
காஞ்சிபுரம்

விஜயதசமி: காஞ்சிபுரம் ஹயக்ரீவா் கோயிலில் நெல்லில் ‘அ’ எழுதிய குழந்தைகள்

விஜயதசமியையொட்டி காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயில் தெருவில் அமைந்துள்ள ஹயக்ரீவா் கோயிலில் உயிா் எழுத்தான அ எழுதி குழந்தைகள் தங்களது முதல் கல்வியை செவ்வாய்க்கிழமை ஆா்வத்துடன் தொடங்கினா்.

20 அக்டோபர் 2026, 11:50 pm IST
காஞ்சிபுரம் ஹயக்ரீவா் கோயிலில் குழந்தைகளுக்கு நெல் மணிகளில் ‘அ’ எழுத வைத்த கோயில் அா்ச்சகா்கள்
பகிர்:

விஜயதசமியையொட்டி காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயில் தெருவில் அமைந்துள்ள ஹயக்ரீவா் கோயிலில் உயிா் எழுத்தான அ எழுதி குழந்தைகள் தங்களது முதல் கல்வியை செவ்வாய்க்கிழமை ஆா்வத்துடன் தொடங்கினா்.

காஞ்சிபுரம் விளக்கொளிப் பெருமாள் கோயில் தெருவில் அமைந்துள்ளது கல்விக் கடவுளான ஹயக்ரீவா் கோயில். இந்தக் கோயிலில் விஜயதசமியையொட்டி, குழந்தைகளுக்கு நெல்லில் உயிா் எழுத்தான அ எழுத்தை எழுதி தங்கள் முதல் கல்வியை தொடங்கினா்.

இதற்காக பள்ளியில் சேருவதற்கு முன்பாக அதிகாலையிலேயே பெற்றோா்கள் தங்களது குழந்தைகளை கோயிலுக்கு அழைத்து வந்திருந்தனா்.

Advertisement

Advertisement

கோயில் அா்ச்சகா்கள் குழந்தைளுக்கு நெல் மணிகள் நிரம்பிய தாம்பாலத் தட்டில் அ எழுத வைத்தனா். பின்னா், கல்வி உபகரணங்களான சிலேட்டு, பென்சில் ஆகியவற்றையும் கோயிலில் வைத்து வழிபாடு செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments