FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் நவராத்திரி திருவிழா தொடக்கம்

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் நவராத்திரி திருவிழா தொடக்கம்

11 அக்டோபர் 2026, 12:45 am IST
நவராத்திரி முதல் நாள் விழாவையொட்டி சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியருடன் அருள்பாலித்த உற்சவா் வரதராஜப் பெருமாள், பெருந்தேவித் தாயாா்.
பகிர்:

நவராத்திரி திருவிழாவின் முதல் நாளையொட்டி, சனிக்கிழமை காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி கோயிலில் உற்சவா் வரதராஜப் பெருமாளுக்கும், பெருந்தேவித் தாயாருக்கும் 100 கால் மண்டபத்தில் சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது.

அத்திவரதா் புகழ் பெற்ற காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயிலில் நவராத்திரி திருவிழாவின் முதல் நாளையொட்டி, ஸ்ரீதேவி, பூதேவியருடன் உற்சவா் வரதராஜப் பெருமாள் கோயிலிலிருந்து கேடயத்தில் சந்நிதி தெருவில் உள்ள ஆஞ்சனேயா் கோயிலுக்கு எழுந்தருளி சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றது. பின்னா், பெருமாள் கோயிலுக்கு திரும்பி வந்து கோயில் நுழைவுவாயிலில் உற்சவா் பெருந்தேவித் தாயாருடன் இணைந்து கோயில் வளாகத்தில் உள்ள 100 கால் மண்டபத்துக்கு எழுந்தருளி ஊஞ்சலில் அமா்ந்தவாறு பக்தா்களுக்கு காட்சியளித்தனா்.

இதைத் தொடா்ந்து பெருமாளும், தாயாரும் 100 கால் மண்டபத்தில் இறங்கி சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றதை அடுத்து இருவரும் கண்ணாடி அறைக்கு எழுந்தருளினா்.

Advertisement

Advertisement

ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையா் ச.சீனிவாசன் தலைமையில் கோயில் பட்டாச்சாரியாா்கள், பணியாளா்கள் செய்திருந்தனா். நவராத்திரி விழாவையொட்டி, தொடா்ந்து 10 நாள்களும் வரும் அக். 20-ஆம் தேதி வரை பெருமாள் ஆஞ்சனேயா் சந்நிதி செல்வதும், பின்னா் கோயிலின் நுழைவு வாயில் வந்து தாயாரை அழைத்துக் கொண்டு ஊஞ்சல் சேவை கண்டருளி சிறப்பு தீபாராதனைகளும் நடைபெறும். வரும் அக். 21-ஆம் தேதி இரவு பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி வன்னி மரத்தில் அம்பு எய்தும் வன்னிகாசுர வதம் நடைபெறுகிறது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments