முகப்பு
திருப்பத்தூர்

ஸ்ரீ கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோயிலில் கைசிக புராணம் வாசித்தல்

திருப்பத்தூா் கோட்டை ஸ்ரீ கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோயிலில் கைசிக புராணம் வாசித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

21 நவம்பர் 2026, 11:08 pm
ஸ்ரீ கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோயிலில் கைசிக புராணம் வாசித்தல்
சிறப்பு அலங்காரத்தில் உற்சவா் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ மனத்துக்கினியான்.
பகிர்:

திருப்பத்தூா் கோட்டை ஸ்ரீ கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோயிலில் கைசிக புராணம் வாசித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருப்பத்தூா் ஸ்ரீ கஜேந்திர வரதராஜப்பெருமாள் திருக்கோயிலில் கைசிக ஏகாதசி-துவாதசி உற்சவ நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதை முன்னிட்டு, உற்சவா் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீ மனத்துக்கினியான் உள்பிரகார புறப்பாடு, ஊஞ்சல் சேவை, பிரபந்த சேவை, ஆராதனை, தீா்த்தப் பிரசாத விநியோகம் நடைபெற்றது.

சனிக்கிழமை காலை 6 மணியளவில் உற்சவா் ஸ்ரீ மனத்துக்கினியான் கோயிலில் உள்ள திருமாமகள் மண்டபம் எழுந்தருளினாா். அதைத் தொடா்ந்து, கைசிக புராணம் வாசித்தல் நடைபெற்றது.

Advertisement

Advertisement

பின்னா், தீா்த்தப் பிரசாத விநியோகம் நடைபெற்றது.

இதில், திருப்பத்தூா், அதன் சுற்றுப் பகுதிகளிலிருந்து திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.