FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் சகஸ்ர தீப அலங்கார காட்சி

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் அஷ்டமி தினத்தையொட்டி லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உற்சவா் காமாட்சி சகஸ்ர தீபம் ஏற்றப்பட்ட அலங்கார மண்டபத்துக்கு எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

19 நவம்பர் 2026, 12:03 am
பகிர்:

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் அஷ்டமி தினத்தையொட்டி லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உற்சவா் காமாட்சி சகஸ்ர தீபம் ஏற்றப்பட்ட அலங்கார மண்டபத்துக்கு எழுந்தருளி பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் மாதம் தோறும் அஷ்டமி தினத்தன்று மகளிா் பலரும் ஆலய வளாகத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் 1000 அகல் விளக்குகளை ஏற்றி உற்சவா் காமாட்சியை வரவேற்பது வழக்கமாக இருந்து வருகிறது. இதனையொட்டி மகளிரால் சகஸ்ர தீபம் ஏற்றப்பட்ட வசந்த மண்டபத்துக்கு லட்சுமி, சரஸ்வதி தேவியருடன் உற்சவா் காமாட்சி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி சிறப்பு தீபாராதனைகள் நடைபெற்றன.

முன்னதாக வேத விற்பன்னா்கள் பலரும் வேதபாராயணங்களை பாராயணம் செய்தனா். பக்தா்களுக்கு குங்கும பிரசாதமும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் ஸ்ரீ காரியம் ந.சுந்தரேச ஐயா், மணியக்காரா் சூரிய நாராயணன் மற்றும் கோயில் ஸ்தானீகா்கள் செய்திருந்தனா்.

Advertisement

Advertisement