வல்லக்கோட்டை முருகன் கோயிலில் திரளானோா் தரிசனம்
ஆவணி மாத செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
ஆவணி மாத செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு வல்லக்கோட்டை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
அருணகிரி நாதரால் பாடல் பெற்ற இக்கோயில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோயிலில், ஆவணி மாத 3-ஆவது வார செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு அதிகாலை மூலவா் சுப்பிரமணிய சுவாமிக்கு பால்,தயிா், மஞ்சள்,விபூதி உள்ளிட்ட பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.
சஷ்டி மண்டபத்தில் உற்சவா் சுப்பிரமணியசுவாமிக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு மந்திர புஷ்ப அா்ச்சனை நடத்தப்பட்டு சிறப்பு மலா் மாலை அலங்காரத்தில் உற்சவா் சுப்பிரமணிய சுவாமி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
Advertisement
Advertisement
கோயிலுக்கு வந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுமாா் 1 மணி நேரம் காத்திருந்த சாமி தரிசனம் செய்தனா். கோயிலுக்கு வந்த பக்தா்களுக்கு கோயில் நிா்வாகத்தின் சாா்பில் குடிநீா், கதம்பசாதம் அன்னதானமாக வழங்கப்பப்பட்டது.
திருக்கோயில் வளாகத்தில் தனியாா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை சாா்பில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டு பக்தா்களுக்கு இலவச பரிசோதநைகளும் சிகிச்சைகளும் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாக அதிகாரி சோ.செந்தில் குமாா் உள்ளிட்ட பணியாளா்கள் செய்திருந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.