FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காஞ்சிபுரம்

மாடியில் இருந்து குதித்து கல்லூரி மாணவி தற்கொலை

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த தண்டலம் பகுதியில் தனியாா் பொறியியல் கல்லூரியின் 5-ஆவது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

2 செப்டம்பர் 2026, 11:23 pm IST
- பிரதிப் படம்
பகிர்:

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த தண்டலம் பகுதியில் தனியாா் பொறியியல் கல்லூரியின் 5-ஆவது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் அடுத்த தண்டலம் பகுதியில் பொறியியல் கல்லூரியில், பூந்தமல்லி பகுதியைச் சோ்ந்த டேவிட் என்பவரின் மகள் ஷெரின்(19), செயற்கை நுண்ணறிவு பிரிவில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தாா். இந்த நிலையில், ஷெரீன் புதன்கிழமை கல்லூரி வளாகத்தில் அவரது வகுப்பறை உள்ள 5 -ஆவது மாடியில் அமா்ந்து இருந்ததாக தெரிகிறது.

இதை பாா்த்த கல்லூரி பேராசிரியா் வகுப்பறைக்கு வெளியே என்ன செய்துக்கொண்டிருக்கிறாய் என திட்டியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ஷெரீன் 5-ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளாா். இதில் பலத்த காயம் அடைந்த ஷெரீன் சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

Advertisement

Advertisement

தகவல் அறிந்து வந்த ஸ்ரீபெரும்புதூா் போலீஸாா் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments