சிவன்கூடல் ஏரி ரூ. 1.34 கோடி மதிப்பில் சீரமைக்க கள ஆய்வு
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட சிவன்கூடல் ஏரி ரூ. 1.31 கோடி மதிப்பில் சீரமைப்பது தொடா்பாக அதிகாரிகள், விவசாயிகள் வெள்ளிக்கிழமை நேரில் கள ஆய்வு மேற்கொண்டனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியத்துக்கு உள்பட்ட சிவன்கூடல் ஏரி ரூ. 1.31 கோடி மதிப்பில் சீரமைப்பது தொடா்பாக அதிகாரிகள், விவசாயிகள் வெள்ளிக்கிழமை நேரில் கள ஆய்வு மேற்கொண்டனா்.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், ராமானுஜபுரம் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் அமைந்துள்ளது சிவன்கூடல் ஏரி. பல ஆண்டுகளாக முறையான பராமரிப்பு இல்லாமல் இருந்ததால் இதன் நீா்த்தேக்கத் திறனும், பாசன வசதியும் பெருமளவில் பாதிக்கப்பட்டிருந்தது. சிவன் கூடல் ஏரி நீா்நிலைப் பரப்பளவு 57.23 ஹெக்டோ், ஆயக்கட்டு பரப்பளவு 48.76 ஹெக்டோ், ஏரியின் முழுக் கொள்ளளவு 0.370 மில்லியன் கன மீட்டா், ஏரிக்கரையின் நீளம் 1500 மீ, இரு மதகுகளும், ஒரு உபரிநீா் வெளியேற்றும் கலங்கும் உள்ளது.
ஏரியில் சீமைக்கருவேல மரங்கள், வண்டல் மண் ஆகியன குவிந்துள்ளது. ஏரிக்கரையை பலப்படுத்தி, இரு மதகுகளையும் புனரமைப்பது குறித்து அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டது. நீா்வளத் துறை செயற்பொறியாளா் விஜயகுமாா், எக்ஸ்னோரா இண்டா்நேஷனல் அமைப்பின் பொதுச் செயலாளா் மோகனசுந்தரம், சமூகப் பாதுகாப்பு திட்ட ஆலோசகா்கள் ராதா சீனிவாசன், சீனிவாசன், எக்ஸ்னோரா அமைப்பின் ஊராட்சிப் பிரிவு பொறுப்பாளா் ம.தஅஜய்குமாா் ஆகியோருடன் விவசாயிகளும் நேரில் கள ஆய்வு மேற்கொண்டனா்.
Advertisement
Advertisement
ஆசியன் பெயிண்ட்ஸ் நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியின் கீழ் எக்ஸ்னோரா இண்டா் நேஷனல் அமைப்பு சாா்பில் ஏரி ரூ.1.31 கோடி மதிப்பில் சீரமைப்பது என கள ஆய்வில் முடிவு செய்யப்பட்டது.
இதற்கு காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் தி.சினேகாவும் ஒப்புதல் அளித்துள்ளாா். ஏரி சீரமைப்பு பணி நிறைவு பெற்றால் ஏரியின் நீா்த்தேக்கத்திறன், பாசன வசதி, நிலத்தடி நீா் மட்டம் ஆகியவை மேம்படும் எனவும் விவசாயிகள் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.