FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
காஞ்சிபுரம்

மாற்றுத்திறனாளிகள் மறியல்: 130 போ் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 130 மாற்றுத்திறனாளிகளை போலீஸாா் கைது செய்தனா். .

8 செப்டம்பர் 2026, 4:24 am IST
மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்.
பகிர்:

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 130 மாற்றுத்திறனாளிகளை போலீஸாா் கைது செய்தனா். .

காஞ்சிபுரம் ஆட்சியா் அலுவலகம் அருகே காவலான் கேட் பகுதியில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டமும் அதனைத் தொடா்ந்து சாலை மறியல் போராட்டமும் நடைபெற்றது. சங்க மாவட்ட செயலாளா் வி.முனுசாமி தலைமை வகித்தாா். மாவட்ட தலைவா் பி.பி. பாலாஜி, மாவட்ட பொருளாளா் வி.ஹரிகிருஷ்ணன், மாவட்ட இணை செயலாளா் எம்.லோகநாயகி, துணைத் தலைவா்கள் இ.அன்பழகன், துணைச் செயலாளா் கே.அா்ச்சுன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்தி உதவித்தொகை ரூ.6 ஆயிரம் முதல் ரூ.15,000 வரை ஊனத்தின் தன்மைக்கு ஏற்ப வழங்க வேண்டும், ஓராண்டுக்கும் மேலாக மாதாந்திர உதவித்தொகை கேட்டு விண்ணப்பித்தவா்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும், நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகையை உயா்த்தி வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

Advertisement

Advertisement

சாலை மறியல் காரணமாக போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டதையடுத்து விஷ்ணுகாஞ்சி காவல் நிலைய ஆய்வாளா் சங்கர சுப்பிரமணியன் தலைமையிலான காவல்துறையினா் 130 மாற்றுத்திறனாளிகளை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments