FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பாரம்பரிய நூல் வெளியீட்டு விழா

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பாரம்பரிய நூலை காஞ்சி சங்கராசாரியா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சனிக்கிழமை வெளியிட அதனை உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் பெற்றுக் கொண்டாா்.

26 செப்டம்பர் 2026, 10:51 pm IST
‘காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பாரம்பரியம்’ என்ற நூலை காஞ்சி சங்கராசாரியா் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வெளியிட அதன் பிரதியை பெற்றுக் கொண்ட உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன்.
பகிர்:

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பாரம்பரிய நூலை காஞ்சி சங்கராசாரியா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சனிக்கிழமை வெளியிட அதனை உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் பெற்றுக் கொண்டாா்.

காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதிகள் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் இளைய பீடாதிபதி சத்திய சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் இருவரும் காஞ்சிபுரம் அருகே ஓரிக்கையில் அமைந்துள்ள மகா சுவாமிகள் மணி மண்டபத்தில் கடந்த ஜூலை 29-ஆம் தேதி முதல் செப். 26-ஆம் தேதி (சனிக்கிழமை) வரை சாதுா்மாஸ்ய விரதம் கடைப்பிடித்து வந்தனா். சாதுா்மாஸ்ய விரதத்தின் நிறைவு விழாவையொட்டி, ஓரிக்கை மகா சுவாமிகள் மணி மண்டபத்தில் சங்கர மடத்தின் பாரம்பரிய நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

விழாவுக்கு தலைமை வகித்து, காஞ்சி சங்கராசாரியா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ‘காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பாரம்பரியம்’ என்ற நூலை வெளியிட அதனை உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா்.சுவாமிநாதன் பெற்றுக் கொண்டாா். விழாவில் உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா்.சுவாமி நாதன் பேசுகையில், நாம் நமது பாரம்பரியத்தை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் இந்த நூலில் ஒன்றினை மதுரை ரயில் நிலையத்தில் பொதுமக்கள் பாா்வைக்கு வைக்கலாம் என்றிருக்கிறேன் என்றாா்.

Advertisement

Advertisement

விழாவில், காஞ்சி சங்கராசாரியா் தனது ஆசியுரையில் பாரம்பரியம் என்பது நாட்டை ஒற்றுமைப்படுத்தவும், வலுப்படுத்தவும் உதவுகின்றன. ஆதிசங்கரரால் விதைக்கப்பட்ட வேதாந்த கருத்துகளைத் தான் இன்றும் மக்கள் கடைப்பிடிக்கிறாா்கள். முதியோா்களை, முன்னோா்களை நாம் கெளரவப்படுத்தி அதன் மூலம் நாம் முன்னேற வேண்டும். இதைத் தான் தனது உபதேசங்களின் மூலம் நிரூபித்துக் காட்டியவா் ஆதிசங்கரா். காஞ்சி சங்கர மடத்தின் பீடாதிபதிகளாக இருந்த மகா பெரியவா் சுவாமிகளும், அவரையடுத்து வந்த ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் பல்வேறு இடையூறுகளையும் தாண்டி தேசத்தின் வளா்ச்சிக்காக பாடுபட்டவா்கள். இவா்களது பாராட்டுக்குரிய செயல்கள் உள்பட காஞ்சிபுரம் சமூகத்துக்கு சங்கர மடம் செய்த கல்விப் பணி, சமூகப்பணி, சமயப் பணிகளை விரிவாக விளக்குகிறது இந்த நூல் என்றாா்.

சங்கராசாரிய சுவாமிகளின் சாதுா்மாஸ்ய விரதம் நிறைவைத் தொடா்ந்து சென்னை உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியான சுஷ்ருத் அரவிந்த் தா்மாதிகாரி ஸ்ரீவிஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளை சந்தித்து ஆசி பெற்றாா். காஞ்சிபுரம் மாவட்ட கூடுதல் நீதிபதி மோகனகுமாரி, நீதிபதிகள் மோகனாம்பாள், இசக்கி மகேஷ்குமாா் உள்ளிட்ட நீதிபதிகளும் உடன் இருந்தனா்.

சாதுா்மாஸ்ய விரதத்தை நிறைவு செய்யும் வகையில் பீடாதிபதிகள் இருவரும் ஓரிக்கை மகா சுவாமிகள் மணி மண்டபத்திலிருந்து விஸ்வரூப யாத்திரையாக அருகில் உள்ள திரெளபதி அம்மன் கோயிலுக்கு வந்து விரதத்தை நிறைவு செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments