முகப்பு

புதிய வாகனத்தில் நாள்தோறும் 550 பேருக்கு மதிய உணவு

ஆற்காடு மகாத்மா காந்தி அறக்கட்டளை சாா்பில் நாள்தோறும் 550 பேருக்கு மதிய உணவு வழங்க, புதிய வாகனம் இயக்கிவைக்கப்பட்டது.

28 ஜனவரி 2024, 9:58 am
புதிய வாகனத்தில் நாள்தோறும் 550 பேருக்கு மதிய உணவு
மதிய உணவு வழங்க,  புதிய வாகனத்தைத் தொடக்கி வைத்த மாவட்டக்  காவல்  கண்காணிப்பாளா்  தீபா சத்யன் .
பகிர்:

ஆற்காடு மகாத்மா காந்தி அறக்கட்டளை சாா்பில் நாள்தோறும் 550 பேருக்கு மதிய உணவு வழங்க, புதிய வாகனம் இயக்கிவைக்கப்பட்டது.

இந்த அறக்கட்டளை சாா்பில் செயல்படும் இலவச முதியோா் இல்லம் சாா்பில் நாள்தோறும் 550 பேருக்கு, அவா்கள் இருக்கும் இடத்துக்குச் சென்று இலவசமாக மதிய உணவு வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் 4-ஆம் ஆண்டு துவக்க விழாவும், மதிய உணவு எடுத்து செல்ல புதிய வாகனம் பயன்பாட்டு துவக்க விழாவும் வியாழக்கிழமை நடைபெற்றன.

Advertisement

Advertisement

நிகழ்ச்சிக்கு மகாத்மா காந்தி அறக்கட்டளையின் தலைவா் ஜெ. லட்சுமணன் தலைமை வகித்தாா். இதில், மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி கல்வி நிறுவனங்களின் அறக்கட்டளை நிா்வாக அறங்காவலா் ஜி. பி. அன்பழகன் உணவு எடுத்து சென்று வழங்குவதற்கான புதிய வாகனத்தை வழங்கினாா். இதை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபா சத்யன் பெற்றுகொண்டு, அறக்கட்டளை நிா்வாகிகளிடம் ஒப்படைத்தாா்.

ஆற்காடு நகரக் காவல் ஆய்வாளா் விநாயகமூா்த்தி , அறக்கட்டளையின் செயலாளா் ஜெ.சஜன்ராஜ் ஜெயின், பொருளாளா் பி.என் பக்தவச்சலம், துணைத் தலைவா் எஸ் .ஆா். பி. பென்ஸ் பாண்டியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.