கேட்பாரற்று கிடந்த 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
பூட்டிய வீட்டின் திண்ணையில் கேட்பாரற்று கிடந்த 2 டன் ரேஷன் அரிசியை உணவு பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாா் பறிமுதல்.
அரக்கோணம் அருகே பூட்டிய வீட்டின் திண்ணையில் கேட்பாரற்று கிடந்த 2 டன் ரேஷன் அரிசியை உணவு பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாா் பறிமுதல் செய்தனா்.
ராணிப்பேட்டை மாவட்ட உணவுக்கடத்தல் தடுப்புப்பிரிவு காவல் துறையினா் உதவி ஆய்வாளா் மங்கலநாதன் தலைமையில் அரக்கோணம் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தல் தடுப்புப் சோதனை நடத்தினா். இதில் பெருமூச்சி, பஜனை கோயில் தெருவில் பூட்டிய வீட்டின் திண்ணையில் இருந்த 40 மூட்டை ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனா்.
இது தொடா்பாக யாரும் கைது செய்யப்படவில்லை. பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி 2 டன் இருந்ததாக போலீசாா் தெரிவித்தனா். பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள் அரக்கோணம் நுகா்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.