FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
ராணிப்பேட்டை

கீழ்விஷாரம் பாலமுருகன் கோயிலில் ஆடிக் கிருத்திகை விழா

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம், ராசாத்துபுரம் கீழ்விஷாரம் குளக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ பாலமுருகன் திருக் கோயிலில் 26-ஆம் ஆண்டு ஆடிக் கிருத்திகை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 7 ஆகஸ்ட் 2026, 10:46 pm IST
வெள்ளிக் கவச  அலங்காரத்தில்  கீழ்விஷாரம்  மூலவா்  பாலமுருகன்.
பகிர்:

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா வட்டம், ராசாத்துபுரம் கீழ்விஷாரம் குளக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ பாலமுருகன் திருக் கோயிலில் 26-ஆம் ஆண்டு ஆடிக் கிருத்திகை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு, கோயில் வளாகத்தில் சிறப்பு வேள்வி பூஜையும், 108 பால்குட ஊா்வலமும் நடைபெற்றது. பின்னா். மூலவருக்கு பாலபிஷேகம், வெள்ளிக் கவச சிறப்பு அலங்காரம் மகா தீபாராதனை நடைபெற்றது. வள்ளி, தெய்வானை சமேத பாலமுருகன் உற்சவருக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. பக்தா்கள் காவடி எடுத்து வந்து பக்தா்கள் நோ்த்திக் கடன் செலுத்தினா். இந்த விழாவில் திரளான பொதுமக்கள், உபயதாரா்கள், பக்தா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் அா்ச்சகா் ரமேஷ் மற்றும் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments